சீர்காழி விஜய் சுபம் பெனிபிட் பண்ட் லிட் நிர்வாக இயக்குனருக்கு பாராட்டு விழா


சீர்காழி விஜய் சுபம் பெனிபிட் பண்ட் லிட் நிர்வாக இயக்குனருக்கு பாராட்டு விழா


நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி தேர் வடக்கு வீதியில் உள்ள விஜய் சுபம் பெனிபிட் பண்ட் லிட்டின் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா விஜய் சுபம் பெனிபிட் பண்ட் லிட்டின் நிர்வாக இயக்குனர் மற்றும் லயன்ஸ் சங்க முன்னாள் மாவட்ட கவர்னர் பி.கியான்சந்த் ஜெயின் அவர்களின் பிறந்த நாள் விழா சீர்காழி சுபம் வித்யா மந்திர் ஜெயின் சங்கம் பாரதிய ஜெயின் சங்கடன்னா (பி.ஜெ.எஸ்) மற்றும் சீர்காழி லயன்ஸ் கிளப் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நாகை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க உதவியுடன் நடத்தும் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் ஆகிய
முப்பெரும் விழா சீர்காழி ஸ்ரீசுபம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடத்திய சீர்காழி விஜய் சுபம் பெனிபிட் பண்ட் லிட்டின் நிர்வாக இயக்குனர் மற்றும் லயன்ஸ் சங்க முன்னாள் மாவட்ட கவர்னர் பி.கியான்சந்த் ஜெயினுக்கு அனைத்து இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் பி.ஆர்.ஓ மற்றும் மாவட்ட லயன்ஸ் சங்க தலைவர்ரூபவ் சீர்காழி சக்தி மெட்ரிக் பள்ளி நிர்வாகி எஸ்.சக்தி வீரன் மாவட்ட லயன்ஸ் சங்க இரத்த தான முகாம் தலைவர் ஹாஜி எம்.ஹலிக்குல் ஜமான் மாவட்ட லயன்ஸ் சங்க தலைவர் வி.ஜெயராமன் ஆகியோர் மாலை அணிவித்து பாராட்டினார்கள்.