கடலூர் மாவட்ட ஆட்சியர் வேப்பூர் பகுதியில் மரக்கன்றுகளை நட்டு வைத்து குளம் ஏரி பாசன வாய்க்கால் மராமத்து பணிகளை பார்வையிட்டார்


வேப்பூர் பகுதியில் மரக்கன்றுகளை நட்டு வைத்து கடலூர் கலெக்டர் அன்புச்செல்வன் குளம் ஏரி வாய்க்கால் குடிமராமத்து செய்யும் பணிகளை பார்வையிட்டார்.


கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம் தரிசு கிராமத்தில் அவ்வூரை  சேர்ந்தவர் செந்தில் குமார் ஐஏஎஸ் இவர் விசாகப்பட்டினத்தில் மத்திய அரசின் டிபன்ஸ் துறையில் பணிபுரிந்து வருகிறார். தனது சொந்த கிராமத்திற்கு நல்லது செய்ய வேண்டி தனது சொந்த செலவில் சுமார் 1500 வளர்ந்த மரக்கன்றுகளை வாங்கி கடலூர் மாவட்ட ஆட்சியர் மூலம் தருசு, மற்றும்  மேமாத்தூர், தொரவலூர் வரை செல்லும் அணைக்கட்டு சாலையில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் மரக்கன்றுகளை நட்டு வைத்து கடலூர் மாவட்ட ஆட்சியர் பேசும்போது பொதுமக்கள், தங்களது வீடுகளில் மழைநீர் சேகரிக்கும் கட்டமைப்பை அவசியம் அமைக்க வேண்டும்.  தமிழக அரசு நமது மாவட்டத்தில் எட்டு கோடி மதிப்பில் மழைநீர் சேகரிப்பு செயல்படுத்தபடுகிறது. அதற்காக மாவட்டத்தில் 83 கண்வாய்கள் 1363 ஏரி, குளம் ஆகியவற்றை தேர்வு செய்து தற்போது குடிமராமத்து பணி நடை பெற்று வருகிறது. மழைநீர் சேகரிப்பிலும்,  மரம் வளர்ப்பதில் ஒவ்வொரு குடிமகனும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.  மத்திய அரசுப் பணியில் உள்ள தருசு கிராமத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி செந்தில்குமார் மரம் வளர்ப்பதில் ஆர்வம் காட்டியுள்ளார் அவரை நமது மாவட்டத்தின் சார்பில் பாராட்டுகிறேன் என்று கூறினார். பின்னர் நல்லூர், மேமாத்தூர், திருப்பெயர், கொத்தனூர், அகரம் ஆகிய பகுதிகளில் குளம் ஏரி நீர் வரத்து வாய்க்கால் ஆகியவற்றை மராமத்து செய்யப்படும் பணியை பார்வையிட்டார். மாவட்ட ஆட்சியருடன் நீர் நில மேலாண்மை சிறப்பு பிரதிநிதி டி கே ராமச்சந்திரன், மாவட்ட தலைமை பொறியாளர் செல்வகுமார், மாவட்ட திட்ட இயக்குனர் காஞ்சனா, விருத்தாசலம் சார் ஆட்சியர் பிரசாந்த், வட்டாட்சியர்கள் வேப்பூர் செந்தில்வேல், விருத்தாசலம் கவியரசு, நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் காமராஜ், ஜெயக்குமார், வருவாய் ஆய்வாளர் பழனி, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள்,  ஊரக வளர்ச்சித்துறை உதவி பொறியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.