திருப்பூரில் அரிசி மண்டியில் 3 லட்சம் திருட்டு, சிசிடிவி காமிரா, கம்பியுட்டரும் திருட்டு

வீடியோ இணைப்பு : https://www.youtube.com/watch?v=K7jLFk8Mkq0&feature=youtu.be


திருப்புர் பெருமாநல்லூர் சாலை பிச்சம்பாளையம் பகுதியில் அரிசி மண்டி வைத்திருப்பவர் சண்முகம் இவர் தரைத்தளத்தில் அரிசி மண்டியையும் முதல் மாடியில் தனது குடும்பத்துடனும் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று கடையில் விற்பனையான தொகை 3 லட்சத்தை கல்லா பெட்டியில் வைத்து விட்டு இரவு கடையை அடைத்து விட்டு முதல் மாடியில் தனது குடும்பத்துடன் இருந்துள்ளார். காலை எழுந்து பார்த்த போது வீட்டின் இரும்பு கதவு வெளிப்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சண்முகம் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வெளியே வந்து பார்த்த போது கடையின் கதவுகள் உள்பக்கமாக திறக்கப்பட்டு  கல்லாவில் வைக்கப்பட்டிருந்த 3 லட்சம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டதுடன் சிசிடிவி காமிராக்கள் துண்டிக்கப்பட்டும் கம்ப்யூட்டர் சிபியு வும் திருடப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து சண்முகம் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலிசார் விசாரணையில் கடையின் பின்புறம் உள்ள கழிவறையின் உள்பக்க கதவை முன்னதாக  திறந்து வைத்து  கல்லா சாவி வைக்குமிடங்கள் என அனைத்தையும் நோட்டமட்டு மேல் மாடியில் இருந்து சண்முகம் கீழே வரக்கூடாது என இரும்பு கதவையும் வெளிப்பக்கமாக தாழிட்டு திட்டமிட்டு கொள்ளையடித்திருப்பதும் தெரியவந்துள்ளது. எனவே நன்கு அறிமுகமான நபரே இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கடையில் பணியாற்றிய ஊழியர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.