திருப்பூரில் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு பால்குட ஊர்வலம்

 

திருப்பூரில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு மத்திய பகுதி கழகத்தின் சார்பில் தாராபுரம் ரோடு கோட்டை மாரியம்மன் கோவிலிருந்து அரண்மனைபுதூார் மகாளியம்மன் கோவில் வரை பால்குட ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஊர்வலத்தை மாவட்ட கழக செயளாலர் முத்துவெங்கடேஸ்வரன் துவக்கி வைத்தார். பகுதி செயளாலர் பார்த்திபன் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் மாவட்ட துனை செயளாலர்கள் சரவணக்குமார், இராமகிருஷ்னன், தொழிற்சங்க செயளாலர் திவ்யா பாலு, மாவட்ட இளைஞர் அணி செயளாலர் மணி, துனை செயளாலர் சாஸ்தா செந்தில் வட்ட செயளாலர் பாலா, பகுதி கேப்டன் மன்ற செயளாலர் கணேசன், துனை செயளாலர் அழகேசன், பகுதி இளைஞர் அணி பிரபு, மகளிர் அணி சசிகலா, பரமேஸ்வரி, சண்முகசுந்தரி உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.