கோபி அரசு மருத்துவமனையில் நோயாளர் நலச்சங்க கூட்டம்


கோபிசெட்டிபாளையம் அரசுமருத்துவமனையில் நோயாளர் நலச்சங்க கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் திரு.C.ஜெயராமன் அவர்கள் தலைமையில்,தலைமை மருத்துவர் நடைபெற்றது. Dr P.T.ஆனந்தன் MS முன்னிலை வகித்தார்கள். இந்தக்கூட்டத்தில் மருத்துவமனையில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்துவது,புதிய படுக்கைவிரிப்புகள் கொள்முதல் செய்தல்,மருத்துவமனை வளாகத்தை வர்ணம் பூசுதல்,கழிவுநீர் வசதி ஏற்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.இக்கூட்டத்தில் வருவாய் வட்டாட்சியர்,நகராட்சி ஆணையாளர்,வட்டார வளர்ச்சி அலுவலர்,வட்டார மருத்துவ அலுவலர்,இளமின்பொறியாளர்,கோபி கலைக்கல்லூரி முதல்வர்,இந்திய மருத்துவசங்க தலைவர்,சங்ககிரிசெட்டியார் ஜவுளிக்கடை உரிமையாளர் உள்ளிட்ட நோயாளர் நலச்சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்