திருப்பூர் ரோட்டரி கிளப் சார்பாக முப்பெரும் விழா  

திருப்பூர் ரோட்டரி கிளப் சார்பாக முப்பெரும் விழா  நடைபெற்றது.

 


 

திருப்பூர் ரோட்டரி கிளப் சார்பாக முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் ரோட்டரி கிளப் தலைவர் டாக்டர் கவிதா லட்சுமி வரவேற்புரை ஆற்றினார், ரோட்டரி சங்கச்செயலாளர் இராஜேஸ்வரி முன்னிலை வகித்தார்.  இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ரோட்டரி மாவட்டத் தலைவர் மற்றும் இந்திய மருத்துவ சங்கத்தினுடைய மேட்டுப்பாளையம் கிளையின் தலைவருமான டாக்டர். இஸ்மாயில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.  இவ்விழாவில்  உறுப்பினர்கள் புதியதாக சங்கத்தில் இணைத்தனர். சங்கத்தில் உள்ள உறுப்பினர்களின் பிறந்த நாள் விழா மற்றும் உறுப்பினர்களின் திருமணநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேலும் சமீபத்தில் பெற்றோரை இழந்த இரண்டு பெண் குழந்தைகளின் படிப்பிற்காக தலா ரூ.10,000 கிளப் சார்பாக ரோட்டேரியன் சிவசுப்பிரமணியன் வழங்கினார். மேலும்  திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் சங்கப் பொருளாளர் சீனிவாசன் நன்றி கூற விழா இனிதே நிறைவுப் பெற்றது.