கூடுவாஞ்சேரி ஹோமில் கை கால்களை கட்டி இரும்பு பொருட்களை உண்ணச்சொல்லி சித்ரவதை


 

 

சென்னை ராமாவரத்தை சேர்ந்த சவரிராஜ் மகன் ஸ்டீபன் சக்ரவர்த்தி என்பவருக்கும் சென்னை குரோம்பேட்டை உமையாள்புரம் பகுதியை சேர்ந்த பெண்ணிற்கும் கடந்த 8.5.2019 அன்று பெரியோர்களால் நிச்சயிக்கட்டு திருமணம் நடந்துள்ளது திருமணத்திற்கு பிறகு இருவரும் ஸ்டீபன்ராஜ்  வீட்டில் வசித்து வந்துள்ளனர். இதற்கிடையில்  

தன் மனைவி கர்ப்பினியான (3மாத கர்ப்பிணி) விஷயத்தை கடந்த 13.8.2019 அன்று  குரோம்பேட்டையில் உள்ள தன் மாமனார் வீட்டில் தெரிவிப்பதற்காக ஸ்டீபன் சக்ரவர்த்தி மனைவியை அழைத்து சென்றுள்ளார்.

 

மனைவியை மாமனார் வீட்டில் விட்டு விட்டு வேலை நிமித்தமாக தன்வீட்டிற்கு ராமாவரம் சென்றுவிட்டார். ஆனால் தன் கணவரிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை போன் சுவிச்ஆப் செய்யப்பட்டுள்ளதால் பெண் வீட்டார்  ஸ்டீபன் சக்ரவர்த்தி வீட்டுக்கு சென்று தன் மருமகன் பற்றி  விசாரித்த போது அவருக்கு உடல்நிலை சரியில்லை அதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக ஸ்டீபன் சக்ரவர்த்தியின் தந்தை தம்பி மற்றும் சித்தப்பா மூவரும் முன்னுக்கு பின் முரனாக பதிலளித்தோடு கடைசிவரை ஸ்டீபன் சக்ரவர்த்தியை கண்ணில் காட்டததால் சந்தேகமடைந்த பெண் வீட்டார் தொடர்ந்து தேடிவந்த நிலையில் மதுபோதைக்கு அடிமையான வர்களுக்கு சிகிச்சை அளித்து மறுவாழ்வு அளிப்பதாக கூறி சென்னை மயிலாப்பூரை தலைமையிடமாக கொண்டு அதன் கிளை நிறுவனமாக இயங்கி வரும்  கூடுவாஞ்சேரி மஹாலட்சுமிநகர் சுமனா குட்வில் ஹோமில் ஸ்டீபன் சக்ரவர்த்தி மது போதைக்கு அடிமையாகி விட்டதாக மதுப்பழக்கமே இல்லாத ஸ்டீபன் சக்ரவர்த்தியை அவரது தம்பி மைக்கேல் தந்தை சவரிராஜ் சித்தப்பா அந்தோனிதாஸ் மூவரும் ஹோமிற்கு கனிசமான ஒரு தொகையை கொடுத்து ஹோமிலேயே விட்டு விட்டு சென்றது பெண் வீட்டாருக்கு தெரிந்து ஸ்டீபன் சக்ரவர்த்தியை மீட்டுள்ளனர்.

 

ஸ்டீபன் கூறும்போது எனக்கு மதுப்பழக்கம் அறவே கிடையாது என்ன காரணத்திற்காக என்னை என் குடும்பத்தினர் இங்கு கொண்டு வந்து சேர்த்தார்கள் என்று எனக்கு தெரியாது ஆனால் கடந்த20தினங்களாக என்னை ஹோமில் வைத்து கைகால்களை கட்டிப்போட்டு அடித்து உதைத்து சாப்பாடு போடாமல் அவ்வளவு சித்ரவதை செய்தனர் ஒருகட்டத்தில் ஒரு ஆனியையும் ஒரு மெல்லிய கம்பியையும் கொடுத்து முழுங்க சொன்னார்கள் இல்லையென்றால் கொலை செய்துவிடுவதாக மிரட்டி வலுக்கட்டாயமாக என் வாயில் ஆனி மற்றும் கம்பியை போட்டு தண்ணீரை ஊற்றி முழுங்க வைத்துவிட்டார்கள் இங்கு நான் மட்டுமல்ல என்னை போன்று50க்கும் மேற்ப்பட்டோர் இந்த ஹோமில் சித்ரவதை செய்யப்பட்டு வருகிறார்கள் என சுமனா குட்வில் ஹோமை பற்றி அதிர்ச்சியூட்டும் அடுக்கடுக்கான புகார்களை கூறினார்.

 

வயிற்றில் ஆனி மற்றும் கம்பி இருப்பதற்கான ஸ்கேன் ரிப்போர்ட் உள்பட அணைத்து ஆதாரங்களுடன் கூடுவாஞ்சேரி காவல்நிலையத்தில் தன் குடும்பத்தார் மீதும் சம்மந்தப்பட்ட ஹோம் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கமாறு ஸ்டீபன்ராஜ் மற்றும் அவரது மனைவி ஆகியோர் புகார் அளித்துள்ளனர் அதன் அடிப்படையில் ஹோம் உரிமையாளர் அப்துல் சலாம் மற்றும் மேலாளர் சுப்ரமனி இருவரையும் அழைத்து வந்து கூடுவாஞ்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் இந்த ஹோம் மஹாலட்சுமிநகரில் இருட்டான பகுதியில் அமைந்துள்ளது அருகருகே குடியிருப்புகள் இருந்தாலும் இரவு நேரங்களில் அலரல் சத்தம் கேட்பதாகவும் ஹோமில் எது நடந்தாலும் வெளியில் தெரிய வாய்ப்பில்லை என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.