தாராபுரம் வட்டத்தில் புதிதாக அமையவுள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள இரும்பு உருக்கு மற்றும் உருட்டு ஆலை தொடர்பான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் கலெக்டர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது

தாராபுரம் வட்டத்தில், புதிதாக அமையவுள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள இரும்பு உருக்கு
மற்றும் உருட்டு ஆலை தொடர்பான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் கலெக்டர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அழகு நாச்சியம்மன் திருமண மண்டபத்தில், தாராபுரம்
வட்டம் வடுகபாளையம் கிராமத்தில் புதிதாக அமையவுள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள இரும்பு உருக்கு மற்றும் உருட்டு ஆலை தொடர்பான தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் பொதுமக்கள் உடனான கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட கலெக்டர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.


இக்கூட்டத்தில், தாராபுரம் வட்டத்திற்குட்பட்ட வடுகபாளையம் கிராமத்தில் ஸ்ரீகௌரி ஸ்டீல் ரோலிங் மில் நிறுவனத்தின் சார்பில் அமையவுள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள இரும்பு உருக்கு மற்றும் உருட்டு ஆலை தொடர்பான, இந்திய அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்புச்சட்டம் 1986-ன் கீழ் வெளியிடப்பட்ட 2006-ம் ஆண்டின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையின் படி பொதுமக்கள் உடனான கருத்து கேட்புரைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதிதாக அமையவுள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள ஆலை தொடர்பாக விவசாயிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர். மேற்கூரிய கருத்துக்கள் அனைத்தும் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டிற்கு அனுப்பி
வைக்கப்படவுள்ளது. தொடர்ந்து, கோரிக்கை மனுக்களையும் பொதுமக்களிடமிருந்து கலெக்டர் க.விஜயகார்த்திகேயன் பெற்றுக்கொண்டார்.


இக்கூட்டத்தில், தாராபுரம் சார் ஆட்சியர் பவன்குமார், மாவட்ட சுற்றுச்சூழல்
பொறியாளர் (திருப்பூர் தெற்கு) சண்முகம், உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் வனஜா, உதவி பொறியாளர்கள் வினோத்குமார், கார்த்திக், அரசு அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


 


 


Previous Post Next Post