வேப்பூர் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு போக்குவரத்து விதிகள் குறித்து வேப்பூர் காவல் உதவி ஆய்வாளர் விழிப்புணர்வு பிரச்சாரம்


கடலூர் மாவட்டம் வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 700 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களுக்குப் போக்குவரத்து விதிகள் குறித்து வேப்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரச்சாரம் மேற்கொண்டார்.


அப்போது 18வயதுக்குட்பட்டவர்கள் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டுவது சட்டப்படி தவறாகும். இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களும் பின்னால் அமர்ந்திருப் பவர்களும் சட்டப்படி கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். நான்கு சக்கர வாகனத்தை ஓட்டுபவரும்  உட்கார்ந்திருப்பவர்களும் பாதுகாப்பு கருதி சீட் பெல்ட் அணிய வேண்டும். சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி செல்வது சட்டப்படி குற்றமாகும்.

குடிபோதையில் வாகனம் ஓட்டுவதும் செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவதும் சட்டப்படி குற்றமாகும். ஆட்டோவில் மூன்று பேருக்கு மேல் ஏற்றி செல்வதும் சட்டப்படி குற்றமாகும். அதிவேகமாக வாகனத்தை ஓட்டுவது சட்டப்படி குற்றமாகும் பெரும்பாலான இளைஞர்கள் அதிவேகமாக செல்வதால் உயிரிழப்பு ஏற்படுகிறது. பள்ளி மாணவர்கள் மாணவியர்கள் தங்களது பெற்றோர்கள் சகோதரர்கள் உறவினர்களிடம் போக்குவரத்து விதிகளை கூறி பாதுகாப்பாக வாகனங்களை ஓட்ட வலியுறுத்த வேண்டும். என மாணவர்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டார். நிகழ்ச்சியில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் திருநாவுக்கரசு பட்டதாரி தமிழாசிரியர் தாமோதரன் உதவி ஆசிரியர் ஞானப்பிரகாசம் தலைமை காவலர் சதீஷ் மற்றும் பள்ளி மாணவர்கள் மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post