சீர்காழியில் காங்கிரஸ் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்

சீர்காழியில் காங்கிரஸ் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் சட்டமன்ற தொகுதி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் வசந்த மாளிகை திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கட்சியின் நாகை வடக்கு மாவட்ட தலைவர் எஸ்.ராஜகுமார் தலைமை வகித்தார். வட்டார தலைவர்கள் ஞானசம்பந்தம், பாலசுப்ரமணியன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சிவப்பிரகாசம், சரத்சந்திரன், ஏ.பி.எஸ்குமார், முன்னாள் நகர்மன்ற தலைவர் வழக்கறிஞர் கே.பி.எஸ்.எம்.கணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். நகர தலைவர் லெட்சுமணன் வரவேற்றார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ஸ்ரீவல்லபிரசாத், மாநில பொது செயலாளர் கீரனூர் ராஜேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் கே.அறிவுடைநம்பி, வி.ஆர்.ஏ.அன்பு, பானுசேகர், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சரணவன், மாவட்ட காங்கிரஸ் இணைபொதுசெயலாளர் ராமு, சீர்காழி நகர பொது செயலாளர் எஸ்.கலியபெருமாள், மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.சுப்பராயன், காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் எம்.சிவராமன், உசேன், தீனதயாளன் மற்றும் பவர் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ஸ்ரீவல்லபிரசாத் பேசிய போது தமிழ்நாட்டில் இபிஎஸ், ஓபிஎஸ் கூட மோடி சொல்வதை தான் கேட்டு செயல்படுகிறார்கள். காங்கிரஸ் கட்சியின் புதிய உறுப்பினர் சேர்க்கை அக்டோபர் 1-ம் தேதி தொடங்கப்படும.; 2-ம் தேதி காந்திஜியின் 150-ஆவது ஆண்டு பிறந்த நாள் கொண்டாடப்படும் என்றார்.