வேப்பூர் பகுதியில் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் மக்காசோள பயிரில் ஆய்வு

நல்லுார் வட்டார வேளாண்மை துறை, ஜே.எஸ்.ஏ., வேளாண் கல்லுாரி இணைந்து மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்

 


 

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகிலுள்ள பெரியநெசலூர்  ஊராட்சி பகுதியில் உள்ள  மக்கா சோள பயிர் சாகுபடியில் வேளாண்மை துணை இயக்குனர் வேல்விழி தலைமையில் நல்லுார் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கீதா, வேளாண்மை அலுவலர் திவ்யா, அட்மா  தொழில்நுட்ப மேலாளர் தங்கதுரை ஆகியோர்  முன்னிலையில்  ஆய்வு மேற்கொண்டனர். ஜெ,எஸ், ஏ , வேளாண்மை கல்லுாரி இயக்குனர் ராஜன், முதல்வர் தானுநாதன் தலைமையில் மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.  

 

பெரியநெசலுார், நிராமணி, வலசை, வண்ணாத்துார் ஆகிய  கிராமங்களில்  மக்காச் சோளத்தில், படைப்புழு தாக்குதல் குறித்து ஆய்வு செய்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சிக்களை நல்லூர் வேளாண்மை உதவி இயக்குநர் கீதா  ஏற்பாடு செய்தார்