திருப்பூர் மாவட்ட கலெக்டராக கே. விஜய கார்த்திகேயன் பொறுப் பேற்றார்

திருப்பூர் மாவட்ட கலெக்டராக கே. விஜய கார்த்திகேயன் பொறுப் பேற்ற்றுக் கொண்டார்.

 


 

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இரண்டாவது மாடியில் உள்ள கலெக்டரின் அருகில் விஜய கார்த்திகேயன் ஐஏஎஸ் கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜான் ஜகத் பிரைட் உள்ளிட்ட அலுவலர்கள் வரவேற்றனர். திருப்பூரில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் மக்கள் குறைதீர்ப்பு பணிகளை செவ்வனே செய்யவும், முதல்வரின் திட்டங்களை விரைந்து செயல்படுத்தவும் நடவடிக்கை எடுப்பேன் என கூறினார்.

 

இவர் ஏற்கனவே கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆணையராகவும், நகர்ப்புற வளர்ச்சித் துறையின் இயக்குனராகவும் பணியாற்றியவர். முன்னதாக ஈரோடு, கோவில்பட்டி சப் கலெக்டராக பணியாற்றி உள்ளார். இவர் ஒரு மருத்துவர். மதுரையில் 1986 ஜனவரி 8 ல் பிறந்த இவர் சென்னையில் உள்ள ராமச்சந்திரா கல்லூரியில் 2009 ஆம் ஆண்டு மருத்துவம் பயின்றுள்ளார். பின்னர் அரசியல் சார் நிர்வாகவியல் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார்.  கலெக்டர் விஜய கார்த்திகேயன் தந்தை, கண்ணன் ஐ.எப்.எஸ்., அதிகாரியாக இருந்தவர். தந்தையாரின் வழி யைப் பின்பற்றிய இவர் குறைந்த வயதில் அதிகாரியாக உருவாகி உள்ளார். 26 வயதிலேயே தேர்ச்சி பெற்ற இவர் 2012ம் ஆண்டு ஈரோடு,  தொடர்ந்து கோவில்பட்டி சப் கலெக்டராக பணியாற்றி உள்ளார். இவர் எழுதிய எட்டும் தூரத்தில் ஐஏஎஸ்.,  ஒரே கல்லில் 13 மாங்காய் புத்தகங்கள் பலருக்கு நல்ல வழிகாட்டியாய் இருக்கின்றன.