மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட  வருவாய் அலுவலர் ஆர்.சுகுமார் தலைமையில் நடைபெற்றது

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட  வருவாய் அலுவலர் ஆர்.சுகுமார்  தலைமையில் நடைபெற்றது. 



             
திருப்பூர் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட  வருவாய் அலுவலர் டாக்டர்.ஆர்.சுகுமார்  தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து வீட்டுமனைபட்டா மற்றும்  முதியோர் உதவித் தொகை, புதிய குடும்ப அட்டை வேண்டியும், சாலைவசதி, குடிநீர் வசதி வேண்டியும் என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 248 மனுக்களை பெற்றுக் கொண்டதுடன் மனுதாரர்கள் முன்னிலையிலேயே விசாரணை செய்து அதன் மீது உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு  மாவட்ட வருவாய் அலுவலர்  அவர்கள் அறிவுறுத்தினார்.



தொடர்ந்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.25,000 மதிப்பில் செயற்கை அவயங்களையும், சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ்; திருப்பூர் வடக்கு வட்டத்தைச் சார்ந்த 1 பயனாளிகளுக்கு தலா ரூ.12,000 மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான  உதவித் தொகையினையும் என 3 பயனாளிகளுக்கு ரூ.62,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட  வருவாய் அலுவலர் டாக்டர்.ஆர்.சுகுமார் அவர்கள் வழங்கினார்.  இக்கூட்டத்தில் துணை ஆட்சியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Previous Post Next Post