திருப்பூர் கொங்கு பள்ளி மாணவன் வில்வித்தை போட்டியில் தங்க பதக்கம்

திருப்பூர் கொங்கு பள்ளி மாணவன் வில்வித்தை போட்டியில் தங்க பதக்கம் வென்றார்.

 


 

தமிழ்நாடு இன்டோர் ஃபீல்ட் 14 வயதுக்குட்பட்டோருக்கான வில்வித்தை போட்டிகள் சென்னை பள்ளிக்கரணையில் உள்ள சாம் அகாடமியில் நடைபெற்றது  இதில் 40 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் இதில் திருப்பூர் கே எஸ் ஏ மல்டி ஸ்போர்ட்ஸ் அகடாமி சேர்ந்த சைலேஷ்.தங்கப் பதக்கத்தையும். சஞ்சய் வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றினர். இதில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவர் சைலேஷ் கூறும்போது பயிற்சியாளர் வெங்கடேஷ் அவர்களின் சிறப்பான பயிற்சியால் மாநில அளவில் முதலிடம் பெற்று திருப்பூருக்கு பெருமை சேர்த்துள்ளேன் வருங்காலத்தில் இந்திய அளவில் வெற்றி பெறுவதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட உள்ளேன் நான் வெற்றி பெறுவதற்காக உதவி புரிந்த பள்ளி ஆசிரியர்களுக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.