லாபத்தில் இயங்கும் 15க்கும் மேற்பட்ட விமான நிலையங்களை தனியாருக்கு தர இருப்பதை எதிர்த்து போராட்டம்

லாபத்தில் இயங்கும் விமான நிலையங்களை தனியாருக்கு விற்க வேண்டும் என்று மத்திய அரசு முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற வகையில் விமான நிலைய கூட்டு குழு போராட்டத்தை நடத்துகிறது.

 


 

அதைப்பற்றி விமான நிலைய கூட்டு குழு ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-  இந்தியாவில் உள்ள 126 விமான நிலையங்களில் 3 நாள் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. லாபத்தில் இயங்கும் விமான நிலையங்களை தனியாருக்கு விற்க வேண்டும் என்று மத்திய அரசு முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற வகையில் விமான நிலைய கூட்டு குழு போராட்டத்தை நடத்துகிறது. 123 விமான நிலையங்களை விமான ஆணையகம் நிர்வகித்து வருகிறது. 90க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள் நஷ்டத்தில் இயங்குகிறது. 20ல் இருந்து 25 விமான நிலையங்கள் லாபத்தில் இயங்குகிறது. லாபத்தில் இயங்கும் 15க்கும் மேற்பட்ட விமான நிலையங்களை தனியாருக்கு தர இருப்பதை எதிர்த்து போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறோம். டெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூர் விமான நிலையங்கள் தனியாருக்கு வழங்கப்பட்டு உள்ளது. அப்போது எந்தவொரு விமான நிலையத்தையும் தனியாருக்கு வழங்கப்பட மாட்டாது என்று ஒப்பந்தம் போடப்பட்டது. மத்திய அரசு அந்த ஒப்பந்தத்தை மீறி லாபத்தில் உள்ள விமான நிலையங்களை மட்டும் தனியாருக்கு வழங்குகிறது. ஏன் நஷ்டத்தில் இயங்கும் விமான நிலையங்களை தனியாருக்கு வழங்க வேண்டியது தானே. எல்லா மக்களுக்கும் விமானங்களில் பயணம் செய்ய வேண்டும் என்று பிரதமர் கூறுகிறார். அப்போது சின்ன விமான நிலையங்களை தனியாருக்கு தந்து அதௌ மேம்படுத்த வேண்டியது தானே. ஏன் லாபத்தில் உள்ள விமான நிலையத்தை  தனியாருக்கு தருகிறீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Previous Post Next Post