திருப்பூரில் இனிப்பு காரம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர்களுக்கு ஓர் அறிவிப்பு

திருப்பூரில் இனிப்பு காரம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர்களுக்கு ஓர் அறிவிப்பு



மக்களின் அன்றாட தேவைகளில் அவசியமானதாக விளங்கும் உணவு மற்றும் உணவுப் பொருட்களில் தரம் மற்றும் பாதுகாப்பு உறுதி செய்திட திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது.
தற்போது பண்டிகை காலம் தொடங்கியுள்ள நிலையில் குறிப்பாக தீபாவளி மற்றும கிறிஸ்துமஸ் பண்டிகை வர இருக்கிற காலங்களில் வித விதமான இனிப்புகள், பலகாரங்கள் மற்றும் கேக் போன்ற உணவுப் பொருட்கள் மக்கள் விரும்பி வாங்கி உண்பதும், உறவினர்களுக்கு அன்பளிப்பு அளிப்பதும் நமது கலாச்சாரமாக இருந்து வருகிறது.  இனிப்பு மற்றும் காரம் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய உணவு பாதுகாப்பு வழிமுறைகள்


1. உணவு கையாளுதல் மற்றும் பரிமாறுதல் ஆகிய பணிகளை செய்பவர்கள் கையுறைகள் (Gloves) மற்றும் தலைக் கவசம் (Head Cover) மேலங்கிகள் (Aprons) ஆகியவற்றை அணிய வேண்டும்.


2. இனிப்பு கார வகைகள் தயாரிக்குமிடம் மற்றும்  விற்கும் இடங்களை சுத்தமாகவும் ஈக்கள் மொய்க்கா வண்ணம் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.


3. தயாரிக்கப்பட்ட இனிப்பு கார வகைகளை கையுறை அணியாமல் தொடுவதை தவிர்க்க வேண்டும்.


4. உணவு கையாளும் பணியாளர்கள் தூய்மையானஆடைகள் அணிந்து நகங்களை வெட்டி சுத்தமாக இருத்தல் வேண்டும். பணியினை தொடரும் முன்பும், கழிவறையை பயன்படுத்திய பின்பும், சோப்பு கொண்டு கைகளை சுத்தம் செய்தல் வேண்டும். தொற்று நோயால் பாதிக்கப்பட்டவரை பணிபுரிய அனுமதித்;தல் கூடாது.


5. பணியின்போது பணியாளர்கள் குட்கா பாக்கு, வெற்றிலை, புகையிலை, புகைபிடித்தல், எச்சில் துப்புதல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.


6. சமைப்பதற்கும், தூய்மை செய்வதற்கும், பயன்படுத்தப்படும் தண்ணீர் தூய்மையாக இருத்தல் வேண்டும்.


7. ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி உபயோகப்படுத்துதலை தவிர்த்தல் வேண்டும்.


8. சைவம் மற்றும் அசைவ உணவுகள் தனித்தனியாக பிரித்து வைத்தல் வேண்டும்.


9. இனிப்புகளில் சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட செயற்கை வண்ணங்களை (Colours) 100PPஆ அளவிற்கு சேர்க்கலாம். அதிகப்படியாக சேர்த்தலை தவிர்த்தல் வேண்டும்.


10. காரங்களில் செயற்கை வண்ணங்கள் சேர்க்கக்கூடாது. மீறுவது சட்டப்படி குற்றமாகும்.


11. உணவு வியாபாரம் முடிந்தவுடன் பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும் பாத்திரங்களை கழுவி சுத்தம் செய்து பூஞ்சை தொற்று ஏற்படாதவாறு உலர வைத்தல் வேண்டும்.


12. நெய் மற்றும் இதர இடு பொருட்கள் வாங்கியதற்கான பில் விவரங்களை எப்பொழுதும் கைவசம் வைத்திருத்தல் அவசியம்.


13. இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரித்து பேக்கிங் செய்து அனுப்பும் பொழுது தயாரிப்பு தேதி, உபயோகப்படுத்தும் காலம், பேட்ச் எண், தயாரிப்பாளர் முகவரி ஆகியவை லேபிளில் இருக்குமாறு தெளிவாக தெரியும்படி அச்சிடப்பட வேண்டும்.


14. உணவு பொருட்களை கையாளுபவர்கள் உடற் தகுதியுடன் மருத்துவ சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.


15. சமையலறையில் புகைபோக்கிகள் போதுமான உறிஞ்சி திறனுடன் இருத்தல் வேண்டும். புகைபோக்கி அருகாமையில் உள்ள கட்டிடத்தின் உயரத்தைவிட 6 அடி மேல் இருத்தல் வேண்டும்.


16. இனிப்பு கார வகைகளை தயாரிக்க பயன்படுத்தப்படும் நீரின் தரத்தினை அறியும் பொருட்டு பகுப்பாய்வு சான்றிதழ் (Water Analysis Report) பெற்று இருத்தல் வேண்டும்.


17. இனிப்பு கார வகைகளை தயாரிக்க பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய், நெய் விபரங்களை தகவல் பலகையாக (Display) உணவு கூடத்தில் வைக்கப்பட வேண்டும்.


18. இனிப்பு கார வகைகளை விற்பதற்கு வைக்கப்ட்டுள்ள தட்டுகளில் (Tray) உணவு தயாரிக்கப்பட்ட தேதி, உட்கொள்ளும் காலம் ஆகிய தகவல்கள் இருத்தல் வேண்டும்.


19. இனிப்பு வகைகளை பரிசு பொருளாக பேக்கிங் செய்து விற்பனை செய்யும் பொழுது அதில் பாலில் செய்யப்பட்ட இனிப்பு வகைகளை மற்ற இனிப்பு வகைகளோடு சேர்க்கக் கூடாது. ஏனெனில் பாலில் செய்யப்பட்டவை எளிதில் கெடும் தன்மை கொண்டது. ஆதலால் தனித்தனியாக பேக்கிங் செய்யப்பட வேண்டும்.


20. இனிப்பு மற்றும் கார வகைகளை பேக்கிங் செய்து நுகர்வோருக்கு கொடுக்கும் பொழுது உணவு சேமிப்புக்குரிய தரத்துடன் உள்ள பிளாஸ்டிக் கொள்கலன்களையே (Food Grade Container) பயன்படுத்தவும்.


21. இனிப்புகள் வாங்கும் போது (Sweet Box) ஏற்கனவே பெட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதை தவிர்த்து, அப்போதைக்கு தேவையான அளவு பேக்கிங் செய்து வாங்கி கொள்ள வேண்டும்.


பண்டிகை காலங்களில் மேற்கூறிய அனைத்து நெறிமுறைகளும் கடைபிடிக்கப்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொண்டு பொதுமக்கள் இனிப்பு,கார வகைகளை வாங்கி உபயோகப்படுத்த வேண்டுமென திருப்பூர் மாவட்ட ஆட்சியர்  அறிவுறுத்தியுள்ளார்


Previous Post Next Post