சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி சபை, மற்றும் தமிழ்நாடு அரசு சுகாதாரதுறை இணைந்து சிறப்பு மருத்துவ முகாம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா அறிவொளி நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

 


 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா அறிவொளி நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி சபை, மற்றும் தமிழ்நாடு அரசு சுகாதாரதுறை இணைந்து நடத்தியிருந்தார். காலை 8 .30 மணியளவில் துவங்கி மதியம் 1.00 மணிவரை நடைபெற்றது. அப்பகுதியில் சுமார் 200 க்கும் மேட்பட்ட பொதுமக்களுக்கு  மருத்துவ பரிசோதனை செய்து மருந்துகள் வழங்கப் பட்டது. அப்பகுதியில் உள்ள அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இந் நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட சுகாதார துறை துணை இயக்குநர் ஜெயந்தி அறிவுறுத்தலின் பேரில்  மருத்துவ அலுவலர் Dr.அபுதாகீர்பாஷா பல்லடம் சுகாதார அலுவலர் சண்முகநாதன், ஆய்வாளர்கள் முத்துபையன், லோகநாதன்,  தமிழ்செல்வி, மாவட்ட செயற்குழு தலைவர் உமாநாத் மாவட்ட  செயற்குழு செயலாளர் ஜார்ஜ், வடக்கு மாவட்ட தலைவர் சதாசிவம், பொறுப்பாளர் மஞ்சுநாத், வடக்கு மாவட்ட துணைத் தலைவர்கள்  பாக்கியராஜ், பாண்டியன், துணை செயலாளர்கள் சிவராமகிருஷ்ணன், கணேஷ்குமார், மாரியப்பன், அன்பரசன், நிர்வாகிளல் மற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

 

 

Previous Post Next Post