விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் பள்ளிக்கல்வித் துறை சார்பாக பேரிடர் மேலாண்மை விழிப்பு பேரணி

விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் பள்ளிக்கல்வித் துறை சார்பாக பேரிடர் மேலாண்மை விழிப்பு பேரணியை விருதாசலம் சார் ஆட்சியர் பிரவின்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

 


 

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பேரிடர் மேலாண்மை மற்றும் டெங்கு விழிப்புணர்வு பேரணி விருத்தாசலம் கல்வி மாவட்ட பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்றது. இதில் மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பு செல்வக்குமார் தலைமை தாங்கினார், சிறப்பு அழைப்பாளரா க சார் ஆட்சியர் பிரவீன் குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் விருத்தாசலம் வட்டாட்சியர் கவியரசு ஜே ஆர் சி சேகர் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் தாளாளர்கள் கலந்துகொண்டனர்.

 


 

இதில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டு, ஒழிப்போம் ஒழிப்போம் ஏடிஸ் கொசுவை ஒழிப்போம் என்றும், தீத்தடுப்பு சாதனங்களை பயன்படுத்துவோம், மழைக் காலங்களில் மின்சார சாதனங்களை பாதுகாப்பாய் கையாளுவோம் என்றும், புயல் எச்சரிக்கை கடற்கரை பேரிடர் காலங்களில் பயன்படுத்தும் புயல் பாதுகாப்பு மையங்களை பயன்படுத்துவோம் மிதிக்க வேண்டாம் மருந்து கிடைக்க உயிரை மிதிக்க வேண்டாம் பாதுகாப்பாய் இருப்போம் பாதிப்பை தவிர்ப்போம் அறிந்துகொள்வோம் அவசர உதவி எண்களை அறிந்து கொள்வோம் என்றும், நிலவேம்பு நீரை அருந்துவோம் டெங்கு காய்ச்சலை தவிர்ப்போம் என்றும், மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் கோஷமிட்டு அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவ , மாணவிகள், தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணி நடத்தினர். இதில் மங்கலம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மகளிர் அணி விருதை விகாஸ், சக்தி, சரஸ்வதி விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளிலிருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவி மாணவர்கள் ஊர்வலமாக சென்று பேரணியாக சென்று பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Previous Post Next Post