வேப்பூர் அருகே கொளவாய் கிராமத்தில் டெங்கு நோய் தடுப்பு முகாம் நடைபெற்றது

வேப்பூர் அருகே கொளவாய் கிராமத்தில் டெங்கு நோய் தடுப்பு முகாம் நடைபெற்றது.

 


 

கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுக்கா கொளவாய் கிராமத்தில் டெங்கு நோய் தடுப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மங்களூர் வட்டார மருத்துவ அலுவலர் கலைச்செல்வி தலைமை தாங்கினார். மருத்துவர் ஆனந்தி அவர்களின் மருத்துவ குழுவினர் கிராம பொது மக்களுக்கு காய்ச்சல்கள்  கண்டறிந்து பின் சிகிச்சை அளித்தனர்.

 


 

மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்.

 

அதைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் மற்றும் கொசுக்கள் மூலம் பரவும் நோய்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் அக்கிராமத்தில் வீடு வீடாக சென்று கொசுப்புழு ஒழிப்பு பணியும் மேற்கொள்ளப்பட்டது. இதில் சுகாதார ஆய்வாளர்கள்  தேவகிருஷ்ணன், சிவலிங்கம் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post