காங்கிரஸ் தனித்துப் போட்டியிட தயாரா- தூத்துக்குடியில்சீமான் சவால்

"இந்தியா முழுவதும் புகார் கொடுத்து என்னை புகழ் பெற வைக்கிறார்கள், காங்கிரஸ் தனித்துப் போட்டியிட தயாரா" - தூத்துக்குடியில் சீமான் சவால்நாங்குநேரி தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்காக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளிக்கையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை குறித்த அவருடைய சர்ச்சை பேச்சுக்கு பதிலளித்த அவர், இந்தியா முழுவதும் புகார் கொடுத்து என்னை புகழ் பெற வைக்கிறார்கள். அவர்களுக்கு வேறு வேலை இல்லை. எதையாவது செய்து கொண்டுதான் இருப்பார்கள்.


காங்கிரஸ்- பாஜக கட்சி இங்கே எதற்கு?. மொழியை மதிக்குமா? உணர்வை மதிக்குமா? ஸ்டெர்லைட் பிரச்சனை தீர்க்குமா?, அணு உலையை மூடுமா?, காவிரி, முல்லை பெரியாறு பிரச்சனையில் இந்த கட்சிகளின் நிலைப்பாடு என்ன என சொல்லமுடியுமா?. காமராஜர் எனும் தலைவர் என்றைக்கு இறந்தாரோ அன்றைக்கே காங்கிரசும் இறந்து போய்விட்டது. கேரளாவிலேயே வெல்ல முடியாத காங்கிரஸ், இங்கு கூட்டணியோடு போட்டியிட்டதால்தான் 7 இடங்களில் வெற்றி பெற்றது. இங்கு காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முடியாது. மக்களின் ஒரு பிரச்சினைக்கு கூட காங்கிரஸ் கட்சி போராடியது கிடையாது. மீத்தேன், ஈத்தேன் உள்பட எல்லா திட்டங்களையும் கொண்டுவந்தது காங்கிரஸ் கட்சிதான். மேடையில் அவர்கள் செய்த நல்ல திட்டங்களை சொல்லி வாக்கு பெற முடியாது. மக்களுக்கு காசு கொடுத்துதான் வாக்கினை பெறுகிறார்கள். நான் எனது உணர்வைப் பதிவு செய்வது சிலருக்கு விருப்பமாக இருக்கிறது. சிலருக்கு வெறுப்பாக இருக்கிறது. காமராஜரை பற்றி பேசுவதற்கு காங்கிரஸ் கட்சியினர் யாருக்கும் தகுதி இல்லை. வசந்தகுமார் எம்.பி.யால்தான் நாங்குநேரி தொகுதியில் தேர்தல் திணிக்கப்பட்டது" என சீமான் பேசினார்


Previous Post Next Post