விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வனுக்கு பல்லடம் எம்.எல்.ஏ.,கரைப்புதூர் நடராஜன் தலைமையில் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தனர்

பல்லடம் எம்.எல்.ஏ., விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வனுக்கு வீடு வீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தனர்.விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வனுக்கு இரட்டை இலைச் சின்னத்தில் ஓட்டு கேட்டு கானை, கெடார் ஊராட்சி, இந்திரா நகர், பெரியார் தெரு, ரெட்டியார் தெரு, ராஜாஜி தெரு ஆகிய இடங்களில் பல்லடம் எம்.எல்.ஏ., கரைப்புதூர் நடராஜன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் வீடு வீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தனர். மாவட்டத் துணைச் செயலாளர் சண்முகம், ஒன்றிய செயலாளர்கள் பரமசிவம், சிவாசலம், பொதுக்குழு உறுப்பினர் தண்ணீர் பந்தல் நடராஜன்,  மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் சித்துராஜ், ஏ.எம்.ராம மூர்த்தி, பண்ணையார் பழனிசாமி, சிடிசி பழனியப்பன், ஆவின் ஈஸ்வரன், வட்ட கழக செயலாளர்கள் தர்மலிங்கம, நாகஜோதி, கவின்குமார், சிவக்குமார், மங்கலம் முத்துசாமி, ஊராட்சிக் கழக செயலாளர்கள் விஸ்வநாதன், செண்ணியப்பன், கே.சரவணன், கெடார் ஊராட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சிவக்குமார், துரை, ஜெயப்பிரகாஷ், வெற்றிவேல், ராமலிங்கம், தண்டபாணி, விஜயகுமார், ஏழுமலை உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.