விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் முத்தமிழ் செல்வனுக்கு திருப்பூர் வடக்கு தொகுதி எம்எல்ஏ.,கே.என். விஜயகுமார்  வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் முத்தமிழ் செல்வனுக்கு திருப்பூர் வடக்கு தொகுதி எம்எல்ஏ.,கே.என். விஜயகுமார் தலைமையில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு கழக வேட்பாளராக போட்டியிடும் முத்தமிழ் செல்வனுக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு, கானை ஒன்றியம் கெடார் ஊராட்சி செல்லங்குப்பம், மாரியம்மன் கோவில் வீதி,  84 வது பூத் பகுதியில் திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்  கே.என். விஜயகுமார் எம்எல்ஏ வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தார். உடன் முன்னாள் மண்டல தலைவர்கள் ஜே.ஆர்.ஜான், ராதாகிருஷ்ணன் முன்னாள் கவுன்சிலர்கள் கலைமகள் கோபால்சாமி, விஜயகுமார்,  கனகராஜ், ஈஸ்வரன், சின்னசாமி, ரங்கசாமி, செந்தில் இளைஞரணி ஹரிஹரசுதன் செயலாளர்கள் மனோகரன் , ராஜகோபால் சொசைட்டி தலைவர் ஜுபிடர் சிவகுமார் 5 வது வார்டு நிர்வாகி நாகராஜ் உட்பட உள்ளூர் கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் பொதுமக்களும் திரளாக சென்று வாக்கு சேகரித்தனர்.