கடலூர் மாவட்டத்தில் 3.5 லட்சம் கால்நடைகளுக்கு 17 வது சுற்று  கோமாரி தடுப்பூசி போடும் முகாம்




கடலூர் மாவட்டத்தில் 3.5 லட்சம் கால்நடைகளுக்கு 17 வது சுற்று  கோமாரி தடுப்பூசி போடும் முகாமை கலெக்டர் அன்புச் செல்வன் துவக்கி வைத்தார்.

 


 

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர் கால்நடை மருந்தக கட்டுப்பாட்டிலுள்ள அரிசி பெரியங்குப்பத்தில் 3 .5லட்சம் கால்நடைகளுக்கு17 வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசிபோடும்  பணி துவக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கால்நடை பராமரிப்புத்துறை கடலூர் மண்டல இணை இயக்குனர் கே குபேந்திரன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வெ. அன்புச்செல்வன் கலந்துகொண்டு கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி பணியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். பின் ஊட்டச்சத்து  மாவு பாக்கெட், மற்றும் ரூ 23,000 மதிப்புள்ள நறுக்கும் கருவி இயந்திரத்தை சந்திரன் என்பவருக்கு கலெக்டர்.வழங்கினார்.

 


 

கோமாரி தடுப்பூசி போடும் பணியை கால்நடை உதவி மருத்துவர் கமலக்கண்ணன் தலைமையில் கால்நடை மருத்துவர்கள் நடராஜன்,ஸ்டாலின் வேதமாணிக்கம் ,சுந்தரம், நிக்சன், முரளி, மற்றும் கால்நடை ஆய்வாளர்கள் வீரக்குமார், சாந்தி, அன்பழகன்,

ஏழுமலை ,இரமேஷ்,ஆய்வக உதவியாளர் இரமணி கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் சக்திவேல், லலிதா,வள்ளி, மாரிமுத்து,அஞ்சாபுலிஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி பணிகளை மேற்கொண்டனர்.

கடலூர் மாவட்டத்தில் கோமாரி தடுப்பூசி போடும் முகாம்  அக்டோபர் 14 முதல் நவம்பர் 3 வரை  நடைபெறும் மற்றும் அனைத்து வீடுகளிலும் உள்ள கால்நடைகளுக்கு தடுப்பூசி பணிநடைபெற உள்ளது. 

 


 

இப்பணியை மேற்கொள்ள 88 குழுக்கள் கால்நடை உதவி மருத்துவர் கால்நடை ஆய்வாளர் கால்நடை பராமரிப்பு உதவியாளர் கொண்ட குழுக்கள் தடுப்பூசி பணியை மேற்கொள்ள உள்ளார்கள். பொதுமக்கள் தங்களது கால்நடைகளை தவறாமல் கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி அந்தந்த பகுதியில் உள்ள முகாம்களில் மற்றும் கால்நடை மருந்தகங்களில் சென்று போட்டுக்கொள்ளுமாறு கடலூர் மண்டல இயக்குனர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிகழ்ச்சியில் தீவன அபிவிருத்தி திட்ட துணை இயக்குனர் மருத்துவர் லதா உதவி இயக்குனர் நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் ராஜேஷ் குமார் உதவி இயக்குனர்கள் கஸ்தூரி மோகன் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர் மருத்துவர் வேங்கடபதி மற்றும் ஆவின் மேலாளர் மருத்துவர் வெங்கடாசலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.


 

 



 

Previous Post Next Post