மாநில அளவில் நடைபெற்ற தடகள விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்று தங்க பதக்கம் வென்ற காவலர்

தமிழ்நாடு காவல்துறை காவலர்களுக்கான மாநில அளவில் நடைபெற்ற தடகள விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்று தங்க பதக்கம் வென்ற காவலர்.

 


 

தமிழ்நாடு காவல்துறை காவலர்களுக்கான மாநில அளவில் தடகள விளையாட்டுப் போட்டி மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 14 -10 -2019 அன்று தொடங்கி  16 -10- 2019  மூன்று நாட்கள்  நடைபெற்றது. இப்போட்டியில் வடக்கு மண்டல காவல்துறை சார்பாக திருப்பாப்புலியூர் காவல் நிலையம் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு சக்திவேல் (51) என்பவர் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் தடகளப் போட்டியில் கலந்துகொண்டு இரண்டு போட்டிகளிலும் முதலாவதாக வந்து வெற்றி பெற்று தங்கப் பதக்கம் பெற்றார். இப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்று தங்கப் பதக்கம் பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் சக்திவேல் அவர்களை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் ஐபிஎஸ் அவர்கள் பாராட்டினார். உடன் கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி சாந்தி இருந்தார்.

Previous Post Next Post