மகளிர் சுய உதவிக் குழு கூட்டமைப்பிற்கான செயல்   ஒருங்கிணைப்பு பயிற்சி


டி.என்.பாளையம் ஒன்றியத்தில் மகளிர் சுய உதவிக் குழு கூட்டமைப்பிற்கான செயல் 

 ஒருங்கிணைப்பு பயிற்சி


 


 

ஊரக வளர்ச்சி மற்றும்  உள்ளாட்சித் துறை சார்பில் டி.என்.பாளையம் ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் சுய உதவிக் குழு, கூட்டமைப்பிற்கான செயல் ஒருங்கிணைப்பு பயிற்சி 2 நாட்கள் நடந்தது. முகாமில் டி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரக்கன்கோட்டை , கொங்கர் பாளையம், கொண்டையம்பாளையம், அக்கரை கொடிவேரி. உள்ளிட்ட 10 ஊராட்சிகளிலிருந்து கிராம வறுமை ஒழிப்பு சங்கம், 2 பேர், மகளிர் குழு-2 பேர், ஊரக வாழ்வாதார இயக்கம் 2 பேர், என 1ஊராட்சிக்கு 6 பேர் வீதம் 10 ஊராட்சியிலிருந்து 60 பேர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். பயிற்சியில் கிராம ஊராட்சியின் கடமைகள், ஊராட்சி தலைவரின் பொறுப்புகள், கிராமசபையின் நோக்கம், சமூக வரைபடம் , வள ஆதாரவரைபடம், தயாரித்தல், மத்திய மாநில அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் , மகளிர் மேம்பாடு, விழிப்புணர்வு கூட்டங்களின் நோக்கங்கள், ஆகியவை குறித்து மாவட்ட அளவிலான பயிற்றுநர்கள் மெஹராஜ், விஜயலட்சுமி, ஆகியோர் பயிற்சி அளித்தனர். பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்களை டி.என்.பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பஷீர் அகமது (கிராம ஊராட்சி) லதா  ( வட்டார ஊராட்சி)  ஆகியோர் வழங்கினார்கள். பயிற்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையினர் செய்திருந்தனர்.

Previous Post Next Post