5 வயது சிறுமி முந்திரி காட்டில் சடலமாக மீட்பு

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகிலுள்ள மேல குப்பம் கிராமத்தில் உள்ள முந்திரி காட்டில் 5 வயது சிறுமி  சடலமாக மீட்பு

 


வீடியோ இணைப்பு : https://www.youtube.com/watch?v=SY2mrnyJVyU&feature=youtu.be

 

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகிலுள்ள மேல குப்பம் கிராமத்தை சேர்ந்த உத்தண்டி ராஜேஸ்வரிக்கு அம்சவள்ளி வயது 7, மீனா வயது 5, கனகவள்ளி வயது 3 என்ற மூன்று குழந்தைகளோடு மேலக்குப்பம் கமலம் கணவர் பெயர் ராஜமாணிக்கம் இவர்கள் வீட்டில் பல ஆண்டுகளாக கொத்தடிமை போல் வேலை பார்த்து வந்தனர்.

 


 

இந்த நிலையில் கடந்த 1 வாரத்திற்கு முன்பு ராஜேஸ்வரி தனது மகள் மீனாவை காணவில்லை என்று நெய்வேலி தர்மல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் கமலம், ராஜமாணிக்கம், அஞ்சலை, அருள் மற்றும் அருள் ஐயப்பன் இவர்களை சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்ததில் கமலத்திற்கு சொந்தமான முதனையில் உள்ள முந்திரி காட்டில் சிறுமி மீனாவை கொன்று புதைத்துள்ளார் என்று விசாரனையில் தெரியவந்தது.  அதனைத் தொடர்ந்து முந்திரி காட்டில் புதைக்கப்பட்ட சிறுமி மீனாவின் சடலத்தை மீட்டு விழுப்புரம் மற்றும் புதுவையை சேர்ந்த மருத்துவர்கள் உதவியுடன் மீனாவின் சடலத்தை விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. நெய்வேலி சரக காவல் துணை கண்காணிப்பாளர் லோகனாதன் தலைமையில் காவல் ஆய்வாளர் லதா, ரவிச்சந்திரராஜன், விருத்தாசலம் வட்டாட்சியர் கவியரசு காவல் உதவி ஆய்வாளர் சக்கரபாணி ஆகியோர் உடனிருந்தனர். அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது