நாகப்பட்டினதில் சமூக நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் -அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்

நாகப்பட்டினம் மாவட்டம் சமூக நலத்துறை சார்பில் 1657 பெண்களுக்கு ரூ.11
கோடியே 43 லட்சத்து 36 ஆயிரத்து 016 மதிப்பிலான திருமண நிதியுதவி மற்றும்
திருமாங்கல்யம் செய்வதற்கான தங்கம் ஆகியவற்றை கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்
நாகப்பட்டினம் மாவட்டம் செம்பனார்கோவில் அண்ணா திருமண மண்டபத்தில்
சமூக நலத்துறை சார்பில் நடைபெற்ற விழாவில் தரங்கம்பாடி, செம்பனார் கோவில்,
சீர்காழி, மயிலாடுதுiறை, குத்தாலம் ஆகிய 5 ஒன்றியங்களை சோந்த 642
பெண்களுக்கு தலா ரூ.25,000 வீதம் ரூ.1 கோடியே 60 லடச்த்து 50 ஆயிரம் மதிப்பிலான
திருமண நிதியுதவித் தொகை மற்றும் 1015 பயனாளிகளுக்கு தலா ரூ.50,000 வீதம் ரூ.5
கோடியே 07 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான திருமண நிதியுதவித் தொகை உட்பட
மொத்தம் 1657 பெண்களுக்கு ரூ.11 கோடியே 43 லடச் த்து 36 ஆயிரத்து 016
மதிப்பீட்டில் திருமாங்கல்யம் செய்வதற்கான 8 கிராம் தங்கம் மற்றும் திருமண
உதவித்தொகையினை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
வழங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவர் பிரவீன்.பி.நாயர் தலைமை வகித்தார்.
பெண்களுக்கு திருமாங்கல்யம் செய்வதற்கான தங்கம் மற்றும் திருமண நிதியுதவியினை வழங்கி கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் தெரிவித்ததாவது, 


மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழக அரசு, பல்வேறு நல்ல திட்டங்களை ஏழை எளிய மக்களுக்காக அறிவித்து செயல்படுத்தி வருகிறது. ஏழை எளிய, வறுமைக் கோட்டுக்கு க Pழே வாழும் மக்களுக்காக பல்வேறு சமூக நலத் திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன. தமிழகத்தில் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தொடங்கிய அனைத்துத் திட்டங்களும் தொடர்ந்து செயல்படுத்தப் படுகின்றன. குறிப்பாக பெண்களின் நலன் காககு; ம் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன. தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டமானது, 2011 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி, பேருந்து பயண அட்டை உட்பட அனைத்தும் வழங்கப்படுகின்றது. சமூக நலத்துறையின் சார்பில் இரு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ்  இருவருக்கும் தலா ரூ.25,000 வீதம் அவாத் ம் வங்கி கணக்கிலேயே வைப்பீட்டு தொகையாக செலுத்தப்படுகிறது. பிறந்தபோதே அவர்களுக்கான வாழ்வாதாரத்தை பெருக்குகின்ற வகையில் தமிழக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் 12 ம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு திருமங்கல்யத்திற்கு தங்கத்துடன் ரூ.25,000-ம் பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு முடித்த பெண்களுக்கு திருமங்கல்யத்திற்கு தங்கத்துடன் ரூ.50000 ம் வழங்கப்பட்டு வந்தது. மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தேர்தல் அறிக்கையில் அறிவித்தது போல திருமங்கல்யத்திற்கு தங்கம் 4 கிராமிலிருந்து, 8 கிராமாக உயத்தி வழங்கப்படுகிறது.


இத்திட்டம் பெண்கல்வியை ஊக்குவிக்கும் சமுதாய புரட்சிகரத் திட்டமாகும். ஏழை, எளிய சாமானிய மக்களின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு தொடர்ந்து பாடுபடுகிறது.
இன்றைய தினம் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள 5 ஒன்றியங்களை சேர்ந்த 642
பெண்களுக்கு தலா ரூ.25,000 வ Pதம், ரூ.1 கோடியே 60 லட்சத்து 50 ஆயிரம் திருமண
நிதியுதவியும், 1015 பெண்களுக்கு தலா ரூ.50,000 வீதம், ரூ.5 கோடியே 07 லட்சத்து 50
ஆயிரம் திருமண நிதியுதவியும், 1657 பெண்களுக்கும் தலா 8 கிராம் வீதம் திருமாங்கல்யம் செய்வதற்கான தங்கம் என மொத்தம் 1657 பயனாளிகளுக்கு ரூ.11
கோடியே 43 லட்சத்து 36 ஆயிரத்து 016 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்
வழங்கப்படுகின்றன. இத்தகைய நல்ல திட்டங்களை பயன்படுத்திக் கொண்டு வாழ்வில்
உயர வேண்டும் என தெரிவித்தார்.


இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பவுன்ராஜ்(பூம்புகார்), பி.வி.பாரதி(சீர்காழி), வி.ராதாகிருஷ்ணன்(மயிலாடுதுறை), மாவட்ட சமூக நல அலுவலர் செ.உமையாள், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் இ.கண்மணி உடப் ட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.