நத்தம் அருகே புதிய சமுதாய கூடம் கட்ட பூமிபூஜை ஆண்டிஅம்பலம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

நத்தம் அருகே புதிய சமுதாய கூடம் கட்ட பூமிபூஜை ஆண்டிஅம்பலம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கோசுகுறிச்சி ஊராட்சியைச் சேர்ந்தது கருத்தலக்கம்பட்டி கிராமம் ஆகும். இந்த கிராமத்தில் சமுதாய கூடம் வேண்டும் என்று நத்தம் எம்.எல்.ஏ. ஆண்டி அம்பலத்திடம் கிராம மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். இதை பரிசீலித்த அவர் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.அதன்பேரில் அதற்கான பூமிபூஜை நேற்று கருத்தலக்கம்பட்டி விநாயகர் கோயில் அருகில் நடந்தது. ஆண்டிஅம்பலம் எம்எல்ஏ தலைமை தாங்கி பூமிபூஜையை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் வடக்கு ஒன்றியசெயலாளர் வெள்ளைச்சாமி, ஊராட்சி செயலாளர் கலிபுல்லா, ஊர் அம்பலம் ரவிக்குமார், மணிவண்ணன் மற்றும் ஊர்முக்கியஸ்தர்கள், பொறுப்பாளர்கள், கிராம மக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.