கமல்ஹாசன்னின் 65வது பிறந்தநாளில் 65 பனை விதைகள் நடும் விழா

கமல்ஹாசன்னின் 65வது பிறந்தநாளில் கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதி சார்பில் 65 பனை விதைகள் நடும் விழா நடைபெற்றது.

 


 

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்னின் 65வது பிறந்தநாள் மற்றும் 60ஆம் ஆண்டு கலை பயணத்தை முன்னிட்டு ஈரோடு வடகிழக்கு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதி சார்பில் 65 பனை விதைகள் நடும் விழா ஈரோடு வடகிழக்கு மாவட்ட செயலாளர் ஜி.எல்.எம் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது 

 

கோபி தொகுதிக்கு உட்பட்ட நஞ்சகவுண்டன்பாளையம், வெள்ளாளபாளையம், கலிங்கியம், வெள்ளாங்கோயில், கோட்டுப்புள்ளாம்பாளையம் மற்றும் வேமாண்டாம்பாளையம்  ஊராட்சி பகுதியில் 65 பனை விதைகளை மக்கள் நீதி மய்யத்தினர் நட்டனர் இந்த பணி தொடருமென்றும் இனி வரும் காலங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனை விதைகள் நட இருப்பதாக தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில்  கோபி மேற்கு தொகுதி பொறுப்பாளர் ஜி.சி.சிவக்குமார் கிழக்கு தொகுதி பொறுப்பாளர் என்.கே.பிரகாஷ் தெற்கு தொகுதி பொறுப்பாளர் சுதாசெல்வராஜ்   பகுதி பொறுப்பாளர் கே.ஜி.சரவணன் இளைஞர் அணி நா.முத்துகுமார் வர்த்தக அணி விஜய் சரவணன், பந்தல் குமார்  மகளிர் அணி கலையரசி, என். கே.சக்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர் .