அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 83 ஆவது பட்டமளிப்பு விழா

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 83 ஆவது பட்டமளிப்பு விழா. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 83 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

 


 

அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முருகேசன் தலைமை தாங்கினார்.

மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி .அன்பழகன் முன்னிலை வகித்தார். சிதம்பரம் எம்எல்ஏ பாண்டியன் காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ முருகுமாறன்  வரவேற்புரையாற்றினர். சிறப்பு அழைப்பாளராக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு  பல்வேறு துறைகளில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்ற 57470 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

 

இதில் 37 மாணவர்கள் தங்கப்பதக்கம் பெற்றவர்கள். பின்னர் பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசன் ஆண்டறிக்கை வாசித்து பேசுகையில் பல்கலைகழகத்தின் புதிய வசதிகளாக மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் இணைப்பை ஏற்படுத்த ஐஆர்ஐஎன்எஸ் அமைப்பை பெற்றுள்ளது. மேலும் நூலகத்தில் உள்ள புத்தகங்களின் தொகுப்பு கணினி மயமாக்கப்பட்டுள்ளது எனக் கூறினார். இந்நிகழ்ச்சியில்  பதிவாளர்கள், பேராசிரியர்கள், பிரமுகர்கள், துறை தலைவர்கள், மாணவ மாணவிகள் உட்பட ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர்.

Previous Post Next Post