உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கை திமுக வாபஸ் வாங்கி விட்டு தேர்தலை  சந்திக்கலாம் - அமைச்சர் தங்கமணி

வேண்டுமென்றால் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கை திமுக வாபஸ் வாங்கி விட்டு தேர்தலை  சந்திக்கலாம் , அதிமுக தயாராக உள்ளதாக ஈரோட்டில் தமிழக மின்சாரத்துறை  அமைச்சர் தங்கமணி பேட்டி.

 


 

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகேயுள்ள டெக்ஸ்வேலியில் நடைபெற்ற தென்னிந்திய முதன்மை ஜவுளி கண்காட்சி நடைபெற்றது. இதில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் , மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி,  சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் உள்ளிட்டோர் கலந்து கண்காட்சியை பார்வையிட்டனர்.விழாவில்  ஜவுளித்துறையில் சிறந்து விளங்கும் இளம் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செய்தியாளர்களை சந்தித்த தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி , 

எப்போது உள்ளாட்சி தேர்தல் வந்தாலும் அதிமுக எதிர்கொள்ள தயாராக இருக்கிறது்.யார் உச்சநீதிமன்றத்திற்கு சென்றுள்ளார்கள் என்பது மக்களுக்கு தெரியும் என்றும் ஒருபுறம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து விட்டு அதிமுகவை குறை சொல்வதை மக்கள் அவர்களை பற்றி தெரிந்து வைத்துள்ளார்கள் என்றார். வேண்டுமென்றால் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கை வாபஸ் வாங்கி விட்டு தேர்தலை திமுக சந்திக்கலாம் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். 

 

புதிதாக மதுக்கடைகள் திறக்கப்படுவதால் கூறும் தகவல்கள் தவறானது எனவும்  5734  மதுக்கடைகளை  இருக்க வேண்டியதை விட குறைவாகவே தமிழகத்தில் மதுக்கடைகள் உள்ளன என்றார்.எவ்வளவு பெரிய மழை மற்றும் புயல் வந்தாலும் எதிர்கொள்ள மின்சார வாரியம் தயார்நிலையில் இருப்பதாகவும் , இதற்காக ஆய்வு கூட்டங்கள் நடத்தி முன்னொச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.