குடியிருப்பு பகுதிகளில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்

சத்தியமங்கலம் அடுத்துள்ள தேவாங்க புறத்தில் குடியிருப்பு பகுதிகளில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்.சத்தியமங்கலம் அடுத்துள்ள தேவங்கபுரம் குடியிருப்பு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்போன் கோபுரம் அமைக்க அஸ்திவாரம் தோண்டப்பட்டு இருந்தது. இதை எதிர்த்து அப்பகுதி பொதுமக்கள் முதலமைச்சரிடம் மாவட்ட ஆட்சியரிடம் சத்தியமங்கலம் தாசில்தார் இடமும் இங்கு செல்போன் கோபுரம் அமைக்க கூடாது என மனு அளித்திருந்தனர். இந்நிலையில் நேற்று இரவு அந்த பகுதியில் திடீரென செல்போன் கோபுரத்துக்கு உபயோகப்படுத்தும் ஜெனரேட்டர் வந்து இறங்கியுள்ளது. இதனை கண்டித்து பொதுமக்கள் இன்று காலை 11 மணியளவில் சத்தியமங்கலம் டு பண்ணாரி சாலையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் அரை மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது தகவலறிந்து சத்தியமங்கலம் காவல்துறையினர் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் பொதுமக்களிடையே மேலும் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடக்காது என உத்தரவின் பெயரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டனர்.