வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு  பேரணி

வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு  பேரணி நடைபெற்றது.

 


 

கடலூர் மாவட்டம் வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடலூர் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் டாக்டர் கீதா உத்தரவின்பேரில் டெங்கு விழிப்புணர்வு மற்றும் பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் செல்வகுமார் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் காமராஜ் முன்னிலை வகித்து பேரணியை துவக்கி வைத்தார்.

 


 

சிறப்பு அழைப்பாளராக வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டு கொசுவால் பரவும் நோய்கள் குறித்தும் டெங்கு காய்ச்சல் பரவும் விதங்கள் குறித்தும் அதை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார் மற்றும் சுகாதார நலக் கல்வி வழங்கினார். மேலும் முதிர் கொசுக்களை அழிக்கும் விதமாக வேப்பூர் பகுதி முழுவதும் டயர்கள் தேவையற்ற பொருட்கள் தற்காலிக கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் மூலம் அகற்றப்பட்டது. பின்னர் பப்பாளி இலை சாறு நிலவேம்பு கசாயம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் சுகாதார ஆய்வாளர் ஐயப்பன் ராஜ்மோகன் காவல் ஆய்வாளர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.