உங்க பில்டப்புக்கு அளவே இல்லையா மேடம் - மீரா மிதுனின் அடுத்த அலப்பறை

உங்க பில்டப்புக்கு அளவே இல்லையா மேடம் - மீரா மிதுநின் அடுத்த அலப்பறைவீடியோ இணைப்பு : https://www.youtube.com/watch?v=W29HJHEP6Ww&feature=youtu.be


பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக புகழ் பெற்ற நடிகை மீராமிதுன். இவரது பெயர் தமிழ்செல்வி. இவரை தெரியாதவர்களே இருக்க முடியாது. தனது புகழ் பாடுவதற்காக மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு பணம் கொடுத்து தன்னை பற்றி மீம்ஸ் போடா செய்து பிரபலமானதாக இவரைப்பற்றி பல வீடியோக்கள் வெளிவந்து நெகட்டிவ் ரீதியாகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இது மட்டுமில்லாமல் பிக் பாஸ் பிரபலங்களைப் பற்றி தாறுமாறா பேசி பல வீடியோக்களை வெளியிட்டு, சினிமா இண்டஸ்ட்ரியில் தனது பெயரை கெடுத்துக்கொண்டார். தற்போழுது இவர் தனது ட்வீட்டர் அக்கவுண்டில். anti-corruption தமிழ்நாடு இயக்குனரா பொறுப் பெடுத்து இருக்கேன் என்று சொல்லி ஐடி கார்டு ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். இதுதான் இப்போ சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய பேசுபொருளாக மாறியிருக்கிறது. இந்த ஐடி கார்டை பதிவிட்டு அதன் மூலமா தான் anti-corruption தமிழ்நாடு இயக்குனராய் இருக்கேன் என்கிட்ட இருந்து யாரும் தப்ப முடியாது 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்று வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.   அவர் பதிவிட்டுள்ள கடிதத்தில் இவர் ஒரு வாலண்டியர்,  அதாவது தாங்களா மனமுவந்து இந்த பணியை எடுத்துக்கொண்டு பணியாற்றுபவர்.  இந்த பணிக்காக எந்த ஒரு சம்பளமும் வழங்கப்படாது என்று தெளிவாக பதிவாகி உள்ளது. அது மட்டுமில்லாமல்  இவங்களால புகார்கள் செய்ய முடியுமே தவிர அதற்கான நடவடிக்கை எடுக்க முடியாது. சுயமாக நடவடிக்கை எடுத்து யார் மேலும் வழக்குப் பதிவு செய்ய முடியாது. லஞ்சம் ஒழிப்பு ஊழல் சம்பந்தமாக எந்த நடவடிக்கை எடுத்தாலும் அந்த ஏசிசி கமிஷன் ல ஒரு புகாரா கொண்டு போய்தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்று அந்த கடிதத்தில் உள்ளது. ஆனால் இவர் என்னமோ தமிழ்நாடு முழுக்க ஊழலை ஒழிக்க தனி அத்தாரிட்டி இவங்கதான் அப்படிங்கிற ரேஞ்சுக்கு, அவங்க கொடுத்த லெட்டரை யும் ஐடி கார்டையும் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சும்மாவே இவங்க இண்டஸ்ட்ரிய பத்தி தாறுமாறா  வீடியோ போட்டு பண்ற அட்ராசிட்டி பத்தாதுன்னு, இப்போ anti-corruption டைரக்டர் நான் தான் அப்படின்னு ஒரு பப்ளிசிட்டி பதிவு அடிச்சு விட்டிருக்காங்க. இதை பார்த்து உங்க பில்டப்புக்கு அளவே இல்லையா தமிழ்செல்வி என்று சின்னத் திரை உலகமே பேசும்படியாக பரபரப்பை கிளப்பியுள்ளார்.