வேதநாயகி யானையை உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பக்தர்கள் வழிபாடு 

வேதநாயகி யானையை உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பக்தர்கள் வழிபாடு ஈரோடு மாவட்டம் பவானி மூன்று நதிகள் சங்கமிக்கும் பவானி சங்கமேஸ்வரர் திருக் கோவிலில் கடந்த 43 வருடங்களாக வாழ்ந்து வந்த வேதநாயகி யானை நேற்றைய தினம் இறைவனடி சேர்ந்தது. நேற்று அதனை திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்று திருக்கோவிலுக்கு வருகின்ற பக்தர்கள் அனைவரும் வேதநாயகி யானையை உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் வழிபட்டு செல்கின்றனர்.