ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழை தண்ணீர் வீடுகளில் புகுந்ததால் பொதுமக்கள் அவதி

ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழை தண்ணீர் வீடுகளில் புகுந்ததால் பொதுமக்கள் அவதி.


 

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம்  கீரப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட புடையூர் ஊராட்சியில் சுமார் 1500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.  இந்நிலையில் இன்று இரவு முழுவதும்  கன மழை அதிகமாக பெய்ததில்  புடையூர் ஊராட்சியில் உள்ள  பல்வேறு வீடுகளில் தண்ணீர் புகுந்து உள்ளதால் விடிய விடிய பொதுமக்கள் தூங்காமல் அவதியடைந்து இருந்தனர்.

 


 

பின்னர் வீட்டிற்குள் புகுந்த மழை நீரை வெளியே இரைத்து கொட்டினார்கள். பின்னர் இந்த அவல நிலை குறித்து கீரப்பாளையம் ஊராட்சி அலுவலருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதற்கு எதைப்பற்றியும் கவலைப்படாமல் என்னிடம் ஏன் புகார் தெரிவிக்கிறார்கள் இதற்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என பொதுமக்களிடையே அலட்சியமாகப் பேசியுள்ளார்.  

 


 

இதனால்ஆத்திரம் அடைந்த  பொதுமக்கள் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, ஓட்டர் ஐடி அனைத்தையும் கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்துவிட்டு வேறு கிராமத்திற்கு செல்வதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலர் மீது நடவடிக்கை எடுப்பார்களா என  பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.