திட்டக்குடி அரசு மருத்துவமனையை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திட்டக்குடி அரசு மருத்துவமனையை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 


 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு மருத்துவமனை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மங்களூர் ஒன்றிய செயலாளர் நிதி உலகநாதன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் செல்வராசு காந்தி நகர் செயலாளர் மாயவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் சேகர் கலந்து கொண்டார். மருத்துவமனையில் நவீன வசதி கொண்ட படுக்கை வசதியுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் வார்டில் இருக்கும் கழிவறையில் கடந்த ஆறு மாத காலமாக தண்ணீர் இல்லாததால் நோயாளிகள் சிரமப்பட்டு வருகிறார்கள்  உடனே தண்ணீர் வசதி செய்து தர வேண்டும். ஆண் நோயாளிகளுக்கு கட்டுப்போட ஆன் பணியாளர் கடந்த 10 ஆண்டுகளாக நியமிக்கப்பட வில்லை ஆகையால் உடனே நியமிக்க வேண்டும்.

 

மேலும் ஆண் வார்டில் மேற்குப் புறத்தில் புதர்ச் செடி கொடி வளர்ந்து உள்ளதால் கொசு உருவாகி அது மூலம் டெங்கு மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் உள்ளது ஆகையால் அவைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்றும் மருத்து வமனையில்  200 ரூபாய் கொடுத்தால் செவிலியர்கள் மூலம் குளுக்கோஸ் ஏற்றப்படுகிறது இதனை சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். முடிவில் உத்தமன் நன்றி கூறினார். இதில் மாவட்ட நிர்வாக குழு சுப்ரமணியன், முருகையன், நல்லூர் ஒன்றிய செயலாளர் நாராயணசாமி, மங்களூர் ஒன்றிய துணை செயலாளர் குமார், பழனிவேல், மாவட்ட குழு கலியமூர்த்தி, மங்களூர் ஒன்றிய பொருளாளர் காசிநாதன், மாவட்ட குழு அம்பிகா  ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.