கவுந்தப்பாடியில் சட்ட விரோதமாக  டாஸ்மார்க்கு பார்களில் விடிய விடிய சாராயம் விற்பனை

கவுந்தப்பாடியில் சட்ட விரோதமாக  டாஸ்மார்க்கு பார்களில் விடிய விடிய சாராயம் விற்பனைஈரோடுமாவட்டம் கவுந்தப்பாடியில் சட்ட விரோதமாக  டாஸ்மார்க்கு பார்களில் விடிய விடிய சாராயம் விற்பனை செய்து வருகின்றனர். இது தொடர்பாக அம்மா கால் சென்டரில் புகார் அளித்தும். எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதானல் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு பொதுமக்களுக்கும். கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கும். போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவுந்தப்பாடி இந்து முன்னணி சார்பாக மாவட்ட செயலாளர் முருகேசன். மாவட்ட துணைதலைவர் ஸ்ரீதர் ஆகியோர் தலைமையில் காவல்நிலையத்தில் இன்று 24.11.2019 காவல் ஆய்வாளர் கண்ணனிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. இதில் நகர பொது செயலாளர் கண்ணன் நகரதுணைதலைவர் மாதேஸ் மற்றும் நகர. கிளை பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.