பவானிசாகர் அணை  மீண்டும் 105 அடியை எட்டியது

ஈரோடு மாவட்டத்தின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை  மீண்டும் 105 அடியை எட்டியது.

 


 

அணையின் முழு கொள்ளளவான 105 அடியை எட்டியதால், அணையின் பாதுகாப்பு மணிக்கு ஒன்பது கண் மதகுகள் வழியாக 3250 கன அடி திறக்கப் பட்டது. நீர்வரத்து அதிகரித்த காரணத்தால் படிப்படியாக நீர் வெளியேற்றமும் அதிகரிக்கப்பட்டது. காலை 8.00 மணி நிலவரப்படி  அணைக்கு நீர்வரத்து 10,545 கனஅடியாக இருந்தது. இதனால்ஒன்பது கண் மதகுகள் வழியாக 8750 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
கீழ்பவானி வாய்க்காலில் 1800 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மொத்தம் 10,550 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. சத்தியமங்கலம் பவானிசாகர் அணை காலை 12.00 அளவில் நீர்மட்டம்-105.00 அடி நீர் இருப்பு-32800 Mcft நீர் கொள்ளளவு-32800 Mcft நீர்வரத்து- 26300 c/s நீர் வெளியேற்றம்:- ஆற்றில் உபரி நீர்-25000 c/s Lbp வாய்க்கால்-1300 c/s
மொத்தம் -26300 c/s அணையில் தற்போது 30.3 டி.எம்.சி நீர் இருப்பு உள்ளது. ஒன்பது கண் மதகுகள் வழியாக நீர் வெளியேற்றப்படும் காட்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் கனமழை காரணமாக நீரின் அளவு அதிகரித்துக் கொண்டிருந்த காரணத்தினால் மீண்டும் நீர்வரத்து அதிகரிக்கும் என பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்