வீட்டுக்குள்  தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி

வீட்டுக்குள்  தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி.

 


 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம்  தாலுக்காவிற்குட்பட்ட  ரூப நாராயணன் நல்லூர் கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தொடர்ச்சியாக  பெய்துவரும் மழையால் பொதுமக்கள் அவதிபட்டு வந்தனர். மேலும் மழைநீர் கூரை வீடுகள் மற்றும் தெருக்களில்  புகுந்துள்ளது. இது குறித்து ஊராட்சி செயலர் சரவணனிடம் தகவல் தெரிவித்தனர்.

 


 

ஆனால் ஊராட்சி செயலர் அலட்சியம் காட்டியுள்ளார் இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள்  சாலை மறியல் செய்ய முயன்றனர். தகவலறிந்து வந்த வருவாய் ஆய்வாளர் ,கிராம நிர்வாக அலுவலர்கள் பொதுமக்களை சந்தித்து விரைவில் சரி செய்து தருவதாக வாக்குறுதி கொடுத்தனர். மேலும் ஊராட்சி செயலர் சரவணன் என்பவர் பொதுமக்களை மிரட்டி    வருகிறார்.  என புகார் தெரிவித்தனர்  அவர் மீது உயர் அதிகாரிகள்   நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கையும் விடுத்தனர்.