11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சவர தொழிலாளி போக்ஸோ சட்டத்தில் கைது

பவானி கீரைக்கார வீதியை சேர்ந்தவர் பச்சையப்பன் மகன் வேல்முருகன் (45). சவரத் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

 


 

இவர் பவானியில் ரோட்டோரத்தில் விளையாடிக் கொண்டிருந்த 11 வயதான, ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அச்சிறுமி கூச்சலிட்டதால் அவரது தாய் அதிர்ச்சி அடைந்து வேல்முருகனிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த வேல்முருகன் இருவரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அச்சிறுமியின் தாய் பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வேல்முருகனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.