தாளவாடி அருகே சிறுத்தையை பிடிக்க கூண்டு வைப்பு

தாளவாடி அருகே சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டுள்ளது.சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தாளவாடி வனச்சரகத்தில் தொட்ட கஞ்சனூர் பீம்நகா் சூசையாபுரம் இந்த பகுதியில் விவசாயிகள் அதிகமாக அதிக அளவில் உள்ளனர். இவர்கள் கால்நடை வளர்க்கப்படுகிறார்கள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து சிறுத்தை ஒன்று இந்த பகுதியில் நுழைந்தது பின்னர் அங்குள்ளஒரு வீட்டுடிற்கு முன்பு கட்டி வைத்திருந்த நான்கு ஆடுகள் மற்றும் 15 நாய்கள் கடித்து கொன்றது. மேலும் கடந்த வாரம் பீம் ராஜன் நகர் பகுதிகளில் 2 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. இந்த கேமராவில் சிறுத்தை உருவம் பதிவானது தெரியவந்தது. தொடர்ந்து சிறுத்தையை பிடிக்க கல்குவாரி அருகே நேற்று வனத்துறையினர் கூண்டு வைத்து ஆட்டையும் கட்டி வைத்துள்ளனர்