அனந்தமங்கலம் இராஜகோபால சுவாமி திருக்கோயிலில்  புத்தாண்டு  ஏகதின இலட்சார்ச்சனை விழா

அனந்தமங்கலம் இராஜகோபால சுவாமி திருக்கோயிலில்  புத்தாண்டு  ஏகதின இலட்சார்ச்சனை விழா நடைபெற்றது .நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் அனந்தமங்கலம் அருள்மிகு இராஜகோபால சுவாமி திருக்கோயில் மற்றும் ஸ்ரீதிரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர் கோயில் பிரார்த்தனை தலமாக உள்ளது. ஸ்ரீய பதியாய் ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத அருள்மிகு இராஜகோபாலசுவாமி திருக்கோயிலில் தனி சந்நிதி கொண்டு எழுந்தருளியிருப்பவரும், ஸ்ரீவிஷ்ணு, ருத்ரன், பிரம்மா, சக்தி, ராமர் , கிருஷ்ணர் , இராஜகோபாலசுவாமி மற்றும் கருடன் ஆகியோரின் ஆசியுடன் ரக்தபிந்து, ரக்த ராட்ஷசன் ஆகிய அரக்கர்களை சம்ஹாரம் செய்து


ஆனந்தமாக அனந்தமங்கலம் திருத்தலத்தில் அமர்ந்திருப்பவருமாகிய ஸ்ரீ திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேய சுவாமி மற்றும் கஜாசூரனை வதம் செய்து அருள்மிகு இராஜகோபாலசுவாமி ஆலயத்திற்கு எதிரில் வடக்கு முகமாக தனி சந்நிதி கொண்டு எழுந்தருளியிருக்கும் மூலவர்  ஸ்ரீதிரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேய சுவாமி அவதாஜீத்த மங்கள திருநாளான ஸ்ரீஹனுமத் ஜெயந்தி விழா சூரிய கிரஹணத்தை முன்னிட்டு மதியம் 12.00 மணியளவில் நடை திறக்கப்பட்டு மதியம் 1.00 மணிக்கு ஹனுமத் ஜெயந்தி விசேஷ திருமஞ்சனமும், இரவு 8.00 மணிக்கு திருவீதி புறப்பாடும் நடைபெற்றது.


 


ஸ்ரீதிரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேய சுவாமி திருவீதி உலா, வாண வேடிக்கை, அன்னதானம், மங்களவாத்தியம் உபயத்தை நாகை வடக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர்  நிவேதா எம்.முருகன் செய்தார். ஒளி அமைப்பு உபயத்தை அனந்தமங்கலம் எம்.ஆர்.கண்ணன் செய்தார். விகாரி வருடம் மார்கழி மாதம் 16-ஆம் தேதி 01.01.2020 புதன் அன்று ஸ்ரீசெங்கமலவல்லி தாயார் ஸமேத ஸ்ரீஇராஜகோபால பெருமாளுக்கு பத்தாம் ஆண்டு ஏகதின இலட்சார்ச்சனை விழா வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.


பக்தர்கள் அனைவரும் இலட்சாலர்ச்சனையில் பங்கு கொண்டு பெருமாளின் திருவருளை பெற்றுய்யுமாறு ஆலயம் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. அர்ச்சனை 1-க்கு கட்டணம் ரூபாய் 100 (நூறு மட்டும்) திருக்கோயிலில் உரிய தொகையினை செலுத்தி முழு முகவரியினை தெரிவித்து இரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். இலட்சார்ச்சனை அன்று வர இயலாத நிலையில் உள்ள பக்தர்களுக்கு அர்ச்சனை பிரசாதம் தபாலில் அனுப்பி வைக்கப்படும். பத்தாம் ஆண்டு ஏகதின இலட்சார்ச்சனை விழா ஏற்பாடுகளை தக்கார் உதவி ஆணையர்  ம.இரமேஷ், ஆய்வர்  வீ.மதியழகன், செயல் அலுவலர் கோ.முருகேசன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.