பழனி ரயில்வே நிலையத்தில் வழி தெரியாமல் நின்று கொண்டிருந்த பூட்டானை சேர்ந்த முதியவர் மீட்பு.

பழனி ரயில்வே நிலையத்தில் மதுரையில் இருந்து பாலக்காடு வரை செல்லும் பாசஞ்சர் வண்டியில் புத்த துறவி ஒருவர் இறங்கி வழி தெரியாமல் நின்று கொண்டிருந்துள்ளார்.அப்போது பணியில் இருந்த RBI துணை உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் முதியவரை விசாரித்தபோது அவருக்கு மொழி தெரியாமல் கண்கலங்கி நின்று உள்ளார். அப்போது துணை ஆய்வாளர் பாலசுப்பிரமணி ரயில்வே பாதுகாப்பு படையை அணுகி இந்த தகவலை கூறவே காவலர் கோபாலகிருஷ்ணன் இணையதளத்தில் புத்த துறவி சென்னை அருகே உள்ள பெரம்பூர் ரயில்வே நிலையத்தில் காணாமல் போன செய்தியை கூறவே உடனடியாக பெரம்பூர் ரயில்வே நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில் புத்த துறவியின் பெயர் பாசோ என்றும் அவர் பூட்டான் நாட்டைச் சேர்ந்தவர் என்றும் அவரது மகன் பெங்களூரில் வேலை செய்து வந்துள்ளார். அவரை பார்ப்பதற்காக பூட்டான் நாட்டில் இருந்து பெங்களூர் வந்து மகனை அழைத்துக் கொண்டு மும்பை செல்லும் வழியில் பெரம்பூரில் இறங்கியுள்ளார்.திருப்பி ஏறுவதற்குள் ரயில்  புறப்பட்டு விட்டது.


இதனால் அதற்கு பின்பு வரும் ரயில்களில் ஏறி கடைசியில் பழனியில் வந்து இறங்கியுள்ளார். புத்த துறவி பசோவை மீட்ட காவல்துறை துணை ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் உடனடியாக சென்னை பெரம்பூர் தகவல் கொடுக்கப்பட்டது. மேலும் பழனியிலிருந்து பூட்டான் நாட்டைச் சேர்ந்த பசோவை காவல்துறை பாதுகாப்புடன் பெரம்பூர் ரயில்வே நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரது மகன் மற்றும் அவர்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.இந்த செய்தி அறிந்த பூட்டான் காவல்துறை மத்திய காவல்துறைக்கும் ரயில்வே பாதுகாப்பு படைக்கும் தங்கள் நாட்டின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்று கூறியுள்ளனர். பூட்டான் நாட்டைச் சேர்ந்த ஒருவரை பத்திரமாக மீட்டு அவர்கள் உறவினர்களிடம் ஒப்படைத்த பாதுகாப்பு படை துணை உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியனை பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர்.