சேலம் மாவட்டம் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான இரண்டாம் கட்ட வாக்கு பதிவு

 ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தலுக்கான இரண்டாம்
கட்ட வாக்கு பதிவு சேலம் மாவட்டத்தில் சேலம் மாவட்டத்தில்  8ஊராட்சி ஒன்றியங்களில்   நடைபெறவுள்ளது. 


ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தலுக்கான முதற்கட்ட வாக்கு
பதிவு சேலம் மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் நேற்றைய தினம் 27.12.2019 வெள்ளிக்கிழமை அன்று முடிவுற்று, அனைத்து வாக்கு பெட்டிகளும் அயதயத ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு,சீலிடப்பட்டு, வெப் கேமிராக்கள்  பொருத்தப்பட்டு, காவல்துறை பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்யது, சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல் இரண்டாம் கட்டமாக ஆத்தூர், அயோத்தியாப்பட்டினம், கெங்கவல்லி, பனமரத்துப்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், சேலம், தலைவாசல் மற்றும் வாழப்பாடி ஆகிய 8ஊராட்சி ஒன்றியங்களில் வருகின்ற 30.12.2019 திங்கட்கிழமை அன்று காலை 7.00 மணிக்குதுவங்கி மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளது.


சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல்
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 76,004 வாக்காளர்களும், அயோத்தியாப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்தில் 1,20,378 வாக்காளர்களும், கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்தில் 59,530 வாக்காளர்களும், பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில்
77,089 வாக்காளர்களும், பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 89,108
வாக்காளர்களும், சேலம் ஊராட்சி ஒன்றியத்தில் 69,070 வாக்காளர்களும், தலைவாசல்
ஊராட்சி ஒன்றியத்தில் 1,09,942 வாக்காளர்களும் மற்றும் வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் 67,658 வாக்காளர்களும் என மொத்தம் 6,68,779 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.


மேலும், இவ்வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக ஆத்தூர் ஊராட்சி
ஒன்றியத்தில் 127 வாக்குச்சாவடிகளும், அயோத்தியாப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்தில் 198 வாக்குச்சாவடிகளும், கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்தில் 111 வாக்குச்சாவடிகளும்,
பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 130 வாக்குச்சாவடிகளும், பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 178 வாக்குச்சாவடிகளும், சேலம் ஊராட்சி ஒன்றியத்தில் 102 வாக்குச்சாவடிகளும், தலைவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் 198 வாக்குச்சாவடிகள் மற்றும் வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் 129 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 1,173வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.


சேலம் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி
அமைப்புகளுக்கான சாதாரண தேர்தலுக்கான கட்சி சார்பான தேர்தலில் 12 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 62 வேட்பாளர்களும், 119 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளில் 2 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் போட்டியின்றி தேர்வு பெற்றது போக மீதமுள்ள 117 பதவிகளுக்கு மொத்தம் 505 வேட்பாளர்களும்,
கட்சி சார்பற்ற தேர்தலில் 191 கிராம ஊராட்சிமன்றத் தலைவர் பதவிகளில் 5 கிராம
ஊராட்சிமன்ற தலைவர்கள் போட்டியின்றி தேர்வு பெற்றது போக மீதமுள்ள 186 பதவிகளுக்கு மொத்தம் 760 வேட்பாளர்களும்,


1,683 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில் 244 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு பெற்றது போக மீதமுள்ள 1,439 பதவிகளுக்கு மொத்தம் 4,596 வேட்பாளர்களும் என ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டாம் கட்டமாக நடைபெறவுள்ள தேர்தலில் 8 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 2,005 பதவிகளில் 251 பேர் போட்டியின்றி தேர்வு பெற்றது போக மீதமுள்ள 1,754 பதவிகளுக்கு மொத்தம் 5,923 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.


இத்தேர்தலில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மஞ்சள் நிற
வாக்குச்சீட்டுகளும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு பச்சை நிற
வாக்குச்சீட்டுகளும், கிராம ஊராட்சிமன்றத் தலைவர் பதவிகளுக்கு சிவப்பு நிற
வாக்குச்சீட்டுகளும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வெள்ளை நிற
வாக்குச்சீட்டுகளும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில் ஒரே வார்டில் இரண்டுஉறுப்பினர் பதவிகள் இருயதால் ஊதா நிற வாக்குச்சீட்டுகளும் பயன்படுத்தப்படுகின்றன.


தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, இரண்டாம்கட்ட
வாக்குப்பதிவிற்கு தேவையான 72 பொருட்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் காவல் துறை பாதுகாப்புடன் அயதயத வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பிட ஏதுவாக பிரித்து
வைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட தேர்தலில் சுமார் 9,500 பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மேலும், காவல்துறையினர் பாதுகாப்பு பணியில்
ஈடுபடுத்தப்படவுள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது.


வாக்காளர்கள் அனைவரும் வாக்களிப்பதற்கு தேவையான அனைத்து வசதிகளும்,
முன்னேற்பாடு பணிகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, சேலம்
மாவட்டத்தில் 8 ஊராட்சி ஒன்றியங்களில் இரண்டாம் கட்டமாக நடைபெறவுள்ள ஊரக
உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் தவறாமல்வாக்களித்து 100 சதவிகிதம் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.