பவானியில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அமைச்சர் கே சி கருப்பண்ணன் தீவிர வாக்கு சேகரிப்பு 

பவானியில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அமைச்சர் கே சி கருப்பண்ணன் தீவிர வாக்கு சேகரிப்பு செய்தார்.ஈரோடு மாவட்டம் பவானியில் வருகின்ற முப்பதாம் தேதி நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அஇஅதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக சுற்றுச்சூழல் அமைச்சரும் ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளருமான கே சி கருப்பண்ணன் அவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பவானி ஒன்றிய கழக செயலாளர் எஸ் எம் தங்கவேல் பவானி நகர செயலாளர் கிருஷ்ணராஜ் மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் தட்சிணாமூர்த்தி மற்றும் எம்ஆர் துறை, சித்தையன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சி சார்ந்த பலர் கலந்து கொண்டனர்