கோபிசெட்டிபாளையம் ஸ்ரீ கலியுகவரதன் யாத்திரை குழு சார்பாக கோலாகல ஐயப்ப ஊர்வலம்

கோபிசெட்டிபாளையம் ஸ்ரீ கலியுகவரதன் யாத்திரை குழு சார்பாக விளக்கு பூஜை மற்றும் ஆபரணப்பெட்டி, ஐயப்ப சிலை ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது 

 


 

ஊர்வலம் சந்தியா வனத்துறையிலிருந்து புறப்பட்டு கிருஷ்ணா நகர் வழியாக ஸ்ரீ கூடலூர் எல்லை மாரியம்மன் கோவிலை சென்றடைந்தது. முடிவில் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு மக்கள் நீதி மய்யம் ஈரோடு வடகிழக்கு மாவட்ட செயலாளர் ஜி.எல்.எம் சிவக்குமார் முன்னிலை வகித்து அன்னதானத்தை தொடக்கி வைத்தார் 

 

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மக்கள் நீதி மய்யம் கோபி மேற்கு தொகுதி பொறுப்பாளர் ஜி சி சிவக்குமார் கோபி தெற்கு தொகுதி பொறுப்பாளர் சுதா செல்வராஜ் பகுதி பொறுப்பாளர் வீ ஆர் பழனிச்சாமி, நவீன்குமார் மகளிர் அணி சக்தி, கலைவாணி மற்றும் ஸ்ரீ கலியுகவரதன் யாத்திரை குழுவினர் குருசாமி கணேஷ், கீவர், சண்முகம், ராம்குமார், ஆனந்த், கொண்டப்பன், விஸ்வநாதன், சரவணன், சங்கர், பண்ணாரி, கிருஷ்ணமூர்த்தி, கார்த்திக் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்