குற்றாலத்தில் சைவ வேளாளர் சங்க இளைஞர் எழுச்சி மாநாடு

குற்றாலத்தில் தூத்துக்குடி மாவட்ட சைவ வேளாளர் சங்க இளைஞர் எழுச்சி மாநாடு நடைபெற்றது.தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நடைபெற்ற தூத்துக்குடி மாவட்ட சைவ வேளாளர்
சங்க இளைஞர் எழுச்சி மாநாட்டிற்கு பெருங்குளம் செங்கோல் ஆதீனம் சிவப்பிரகாச தேசிக சத்திய ஞான பரமாச்சாரிய சுவாமிகள் தலைமை தாங்கி ஆசியுரை வழங்கினார். சுப்பிரமணியன் சண்முகசுந்தரம் கவிஞர் நெல்லை ஜெயந்தா ஆகியோர் சிறப்புரை யாற்றினர். மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.மாநாட்டில் மாநாட்டுக்குழு தலைவர் புதிய கண்ணன் செயலாளர் ராம்குமார் பொருளாளர் குத்தாலிங்கம் மாவட்ட தலைவர் லெட்சுமணன் மாவட்ட செயலாளர் பாலன் பொருளாளர் குப்புசாமி தென்காசி காளியப்பன் சொசைட்டி சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.