மேல்மருவத்தூர் கோவிலுக்கு மாலை அணிந்து சென்ற பக்தர்கள் வேன் கவிழ்ந்து விபத்து

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் தாலுக்கா தண்டாரம்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்டவர்கள் மேல்மருவத்தூர் கோயிலுக்கு மாலை அணிந்து வேன் மூலம் புறப்பட்டு சென்றனர். விருத்தாசலம் தாலுக்கா கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் சென்று கொண்டிருந்த போது  சாலையின் குறுக்கே திடீரென செம்மறி ஆடுகள் கூட்டமாக வந்ததால் ஆடுகள் மீது வேன் மோதி நிலைதடுமாறி சாலையின் அருகே இருந்த பள்ளத்தில்  விழுந்து விபத்துக்குள்ளானது.

 

அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை  மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். விபத்தில்   11 க்கும் உட்பட்டோர்  காயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.