சாணார்பாளையம்  ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது

கொடுமுடி வட்டம் கிளாம்பாடி கிராமம் சாணார்பாளையம்  ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.


கிளாம்பாடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் திருவிழா ஸ்ரீ விகாரி வருடம் மார்கழி மாதம் 15' - ம் நாள் செவ்வாய் 31.12.2019 பூச்சாட்டுதலுடன் தொடங்கி  3-1-2020 வெள்ளி  மஞ்சள் நீராட்டு விழாவரை  (4 நாட்கள்) மிக சிறப்பாக நடைபெற உள்ளது.  ஸ்ரீ பகவதி அம்மனுக்கு 108 பால்குடம் எடுத்தல்,  மற்றும் அம்மன் திருவீதி,  உலா வருதல்,  மாவிளக்கு, மற்றும் பெரும் பூஜை,  ஆகிய நிகழ்ச்சிகள் மிக சிறப்பாக  நடைபெற உள்ளது.  திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர் .